பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெரியபுராண ஆராய்ச்சி இலக்கியங்களும் பட்டயங்களும் கல்வெட்டுச் சான்றுகளும் பலவாகும். ஆகவே, திருமுறைகள் தில்லையிற் பாதுகாக்கப்பெற்றன என்று கோடல் பொருத்தமே என்னலாம், ஆயின், அத் திருமுறைகள் யாரால் எப்பொழுது தில்லையிற் சேர்க்கப்பட்டன என்பது கண்டறியக்கூடவில்லை. எந்தப் பழைய நூலும் இச்செய்தியைக் குறிக்காது விட்டது வியப்பேயாகும். சில பதிகங்கள் அழிந்திருக்கலாம் ‘நம்பி திருமுறைகளைப் பரிசோதித்த பொழுது பல ஏடுகள் அழிந்திருந்ததைக் கண்டார். அரசனும் மனம் கவன்றான்’ என்று திருமுறைகண்ட புராண ஆசிரியர் கூறியுள்ளார். இன்று கிடைத்துள்ள திருப்பதிகங்களிற் பல அரைகுறையாக இருத்தலே இதற்குப் போதிய சான்றாகும்.' மேலும், இதனைக் கல்வெட்டுச் சான்று கொண்டும் மெய்ப்பிக்கலாம். திருமுறைகண்ட புராண ஆசிரியர் காலத்தில் சம்பந்தர் பதிகங்களின் தொகை 384 என்பது தெரிகிறது. ஆனால், ஏடுகளிற் காணப்பட்டவை 383. கல்வெட்டு அறிஞர் 1918இல் திருவிடைவாய் என்ற பாடல்பெற்ற தலத்துக் கோவிலை ஆராய்ந்த பொழுது 11 பாக்களைக் கொண்ட அத்தலத்துப் பதிகம் கல்வெட்டிற் காணபப்பட்டது. அது சம்பந்தர் பாடல் என்று முடிவு செய்யப்பட்டது." இப்பொழுது அப்பதிகம் சம்பந்தர் தேவாரத்தில் இடம் பெற்றுவிட்டது." இங்ங்ணம் இலக்கியச் சான்றும் ஒன்றுபடுதலைக் காண, நம்பி தொகுப்பதற்கு முன் சில பதிகங்களேனும் அழிந்திருத்தல் கூடும் என்று நம்ப இடமுண்டாதல் காண்க. இம்மட்டோ? சேக்கிழார்க்குப் பின் அழிந்த பதிகங்கள் சேக்கிழாரால் தமது புராணத்தில், பதிகம் பாடியதாகக் குறிக்கப்பட்டு, இப்பொழுது தேவாரத்தில் இல்லாத பதிகங்கள் சிலவாகும்." இதனைக் காண, சேக்கிழார்க்குப் பின்னும் திருமுறைகண்ட புராண ஆசிரியர்க்கு முன்னும் அழிந்த பதிகங்கள் சில என்னல் தெரியவரும். நம்பி தொகுத்த திருமுறைகள் நம்பி தொகுத்த திருமுறைகள் எத்தனை? என்பது அடுத்து ஆராயவேண்டும் செய்தியாகும். "இராசராசன் மூவர் திருமுறைகளையே தேடி அலைந்தான். அவை தில்லையில் இருப்பதை அறிந்தான் தில்லைவாழ் அந்தணரைக் கேட்டான் அவர்கள் தமிழ்வைத்த மூவர் வந்தால் அறைதிறக்கும் என்றனர். அரசன் மூவர் திருவுருவங்களையும் எழுந்தருளச் செய்து அறைமுன் நிறுத்தினான். கதவு திறக்கப்பட்டது. நம்பி, அழிந்தவை போக எஞ்சி இருந்த ஏடுகளைத் தட்டி முறைப்படுத்தி ஏழு திருமுறைகளாக வகுத்தார்" எனவரும் திருமுறைகண்ட புராணக்கூற்றுப் பொருத்தமாகத் தெரிகிறது. இவை ஏழுமே 'அடங்கல் முறை எனப்படும். இவற்றைப் பாடிய