பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைத் தொகுப்பு 53 மூவர் திருமேளிகளையே இராசராசன் கட்டிய பெரிய கோவிலில் எடுப்பித்துப் பூசை செய்தான். எட்டாம் திருமுறை நம்பி தமது கோவில் திருப்பண்ணியர் விருத்தத்தில் திருவாசகத்தைக் குறிப்பாகவும் திருக்கோவையை வெளிப்படையாகவும் குறித்துள்ளார். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. சம்பந்தரைப் பற்றி தேனி நூல்களும், அப்பரைப் பற்றி ஒரு தனிநூலும் பாடிச் சுந்தரரை 18பாக்களிற் குறித்த நம்பி, திருவாசகப் புலவரை இவ்வளவு எளிதாகக் குறித்துச் சென்ற காரணம் என்ன? நம்பி மாணிக்கவாசகரைப் பற்றிய கதைகளை நன்கு அறிந்திருப்பாராயின், அவரது திருவாசகத்தை நன்கு படித்திருப்பாராயின், அவரது உள்ளம் உருகியிருக்கும். அவரைப்பற்றி ஒரு சிறு நூலேனும் நம்பி விளக்கமாகப் பாடியிருப்பார். இது நிற்க. நம்பி திருக்கோவையாரையும் திருவாசகத்தையும் எட்டாந் திருமுறையாக சேர்த்திருப்பாராயின், சிவநெறிச்செல்வனான இராசராசன் திருவாசகத்திற்கு உருகாதிருத்தல் இயலுமோ? அவன் மாணிக்கவாசகரது திருஉருவம் எடுப்பித்து வழிபட்டிருப்பான் அல்லனோ? அவனது ஆட்சியிலும் பிற்பட்டு 50 ஆண்டுகள் வரையிலும் வெளிப்பட்ட கல்வெட்டுக்களில் மாணிக்கவாசகர் பெயரோ, திருவாசகப் பாடல்களோ குறிக்கப்படவில்லை. வீரராசேந்திரன் (கி.பி. 1063-1069) கால முதலே, திருவெம்பாவை, திருச்சாழல் என்பன சில கோவில்களில் ஒதப்பெற்றன என்பது தெரிகிறது. அவர் திருவுருவமும் பிற்பட்ட காலத்தேதான் எடுப்பிக்கப் பெற்றது.’ இவை அனைத்தையும் நோக்கத் திருவாசகத்தின் சிறப்பு இராசராசன் காலத்தில் வெளிப்படவில்லை என்பது வெள்ளிடைமலை போல் விளக்கமாகும். இதுவும் நிற்க. சுந்தரர் குறித்ததெகையில் திருமூலர் பெயர் உண்டு மாணிக்கவாசகர் பெயர் இல்லை. ஆதலின், அவர் காலத்தாற் பிற்பட்டவர் என்பது நம்பி அறிந்திருத்தல் கூடியதே. அங்ங்ணம் இருப்ப, தொகையுள் குறிக்கப்பட்ட திருமூலரது திருமந்திரம், தொகையிற் குறிக்கப்பெறாத திருவாசகத்திற்குப்பின் வைக்கப்பட்டதெனின், அது திருமுறைகளை வகுக்கும் பேராற்றலும் சிவநெறிப் பண்பும் உடைய நம்பியார் பெருந்தகைமைக்கு ஏற்றதாகாது. எனவே, எட்டு முதலிய திருமுறைகள் நம்பியால் தொகுக்கப்பட்டனவா என்பது ஐயப்பட வேண்டும் செய்தியே ஆகும். இவ்வையம் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகளால் பலப்படல் காண்க. ஒன்பதாம் திருமுறை இதனில் உள்ளவை 9 பேர் பாடிய பதிகங்கள் என்பது கூறப்படுகிறது. அவ்வொன்பதின்மர் காலத்தையும் முறையே ஆராய்வோம்.