பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரியபுராண ஆராய்ச்சி குறிக்கப்பட்டிலர் ஆயின், முதற் குலோத்துங்கன் காலமுதல் பிற்பட்ட ஒவ்வொரு சோழ அரசன் காலத்துக் கல்வெட்டுக்களிலும் தவறாது சேதிராயர்' என்று குறிக்கப்பட்டுளர். இதனைக் காண, நம் சிவனடியாரான சேதிராயர்' முதற் குலோத்துங்கன் காலத்தவர் அல்லது பிற்பட்ட காலத்தவர் ஆவரேயன்றிக் குலோத்துங்கன் காலத்திற்குச் (கி.பி. 1070-120) சிறிதும் முற்பட்டவராகார் என்பது திட்டமாகக் கூறலாம். எனவே இவர் நம்பிக்குப் பல ஆண்டுகள் பிற்பட்டவர் என்று கோடலே முறையாகும். இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளை நோக்க, இவ்வடியவர் பாடல்கள் நம்பியால் தொகுக்கப்படவில்லை. ஒன்பதாம் திருமுறையாகச் சேர்க்கப்படவும் இல்லை என்பதை நன்குணரலாம். பத்தாம் திருமுறை இது திருமூலர் செய்த திருமந்திரமாகும். திருமூலர் சுந்தரராற் குறிக்கப்பட்ட நாயன்மார் திருஆவடுதுறையில் தங்கி இருந்து இந்நூலைச் செய்தார் என்பது சேக்கிழார் கூற்று. இத்தகைய பண்டைய நாயனார் நூலைப் பின் வைத்து, இவர்க்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டவர் பாக்களை 8, 9ஆம் திருமுறைகளாக, சைவப்பற்றிலும் தமிழ்ப் புலமையிலும் சிறந்த நம்பி தொகுத்திருப்பார் என்று சாதாரண அறிவுடையாரும் நினையார் அன்றோ? பதினோராந் திருமுறை இதனுட் கூறப்பட்ட பாக்களின் நூல்களின் ஆசிரியர் (1) சிவபிரான், (2) காரைக்கால் அம்மையார், (3) ஐயடிகள் காடவர் கோன், (4) சேரமான் பெருமான், (5) நக்கீரதேவ நாயனார். (6) கல்லாடதேவ நாயனார், (7) கபிலதேவ நாயனார், (3) பரணதேவ நாயனார், (9) இளம்பெருமாள் அடிகள், (10) அதிரா அடிகள், (11) பட்டினத்துப் பிள்ளையார், (2) நம்பியாண்டர் நம்பி என்போராவர். இவருள் 2, 3, 4ஆம் எண்ணுடையவர் சுந்தரராற் குறிக்கப் பெற்றவர். நக்கீரதேவ நாயனார் இவர் சங்கநூற்களிற் குறிக்கப் பெறாத கண்ணப்பர் வரலாற்றை விளக்கிக் கூறலால், சங்ககால நக்கீரரின் வேறானவர் கண்ணப்பரைத் தவிர வேறு நாயன்மார்களைக் குறியாமையால், இவர் காலம் அப்பர்க்கு முற்பட்ட தெனலாம்'. கல்லாடதேவ நாயனார் இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டென்னலாம்." இவரே கல்லாடம் செய்தவராயின், இவர் காலம் கி.பி. 10 அல்லது 11ஆம் நூற்றாண்டு என்னலாம். என்னை? கல்லாடத்துள் கிபி 9ஆம் நூற்றாண்டினரான மாணிக்கவாசகர்’ குறிக்கப்பட்டிருத்தலின் என்க. :