பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைத் தொகுப்பு 57 கபிலதேவ நாயனார் இவர் விநாயகர்மீது இரட்டைமணிமாலை பாடியுள்ளார். விநாயகர் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. ஆயின் சம்பந்தர்க்கு முற்பட்ட காரைக்கால் அம்மையார் விநாயகர் மீது இரட்டைமணிமாலை பாடியுள்ளார். எனவே விநாயகர் வழிபாடு கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் தமிழகம் நுழைந்ததாதல் வேண்டும். ஆகவே இக்கபிலதேவர் காலம் கி.பி. ஐந்து அல்லது அதற்குப் பிற்பட்ட நூற்றாண்டாகலாம். பரணதேவ நாயனார் இவர் பாடியது 'சிவபெருமான் திரு அந்தாதி என்ற ஒரு நூலாகும். இதன்கண் ஆளப்பட்டுள்ள 'பேச்சு, உளரேல், உன்பால், உன்னை, நீர், ஆனால்" முதலிய சொற்கள் சங்க நூற்களிற் காணப்பெறாதவை. இவையே இப்புலவர் காலம் சங்ககாலத்திற்குப் பிற்பட்டதென்பதை வலியுறுத்தப் போதியவை ஆகும். இளம்பெருமான் அடிகள் 'பெருமான் அடிகள்' என்ற வழக்கு முதன் முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டிற்றான் காணப்படுவது. அங்கு அது நந்திவர்ம பல்லவனைக் குறித்துள்ளது'. நம் புலவர் இளம் பெருமான் அடிகள் என வழங்கப் பெற்றமை நோக்க, இவர் இளவரசராக இருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. ஆயின் இவர் மரபு என்ன என்பது தெரியவில்லை. இவர் காலம் கி.பி. 8.அல்லது அதற்குப் பிற்பட்ட நூற்றாண்டு ஆகலாம். அதிரா அடிகள் - இவரும் விநாயகர்மீது மும்மணிக்கோவை பாடியவர். ஆதலின், இவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் ஆகார். பட்டினத்தடிகள் இவர் மணிவாசகரையும் இரண்டாம் வரகுணனையும் பாராட்டியுள்ளமையால் பத்தாம் நூற்றாண்டினர் என்னலாம். இங்ங்னம் இத்திருமுறையில் இடம்பெற்றுள்ள பெரியார் பலர் நம்பிக்கு முற்பட்டவராதல் காணலாம். நம்பி இவர்களுடைய பாக்களை 11ஆம் திருமுறையாக வைத்து, இவர்கட்குக் காலத்தாற் பிற்பட்டவர் பாக்களை 9ஆம் திருமுறையாக வைக்க எங்ங்ணம் துணிந்திருப்பார்? ஒரு போதும் துணிந்திரார் என்று நினைக்கலாம்.