பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரியபுராண ஆராய்ச்சி முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால் 8, 9, 10, 11ஆம் திருமுறைகளின் முறைவைப்புத் தவறானது என்பது நன்கு தெரிகிறது. அத்துடன் நம்பிக்குப் பிற்பட்டவர் என்று கருதத்தக்கவர் பாடல்களை எல்லாம் நம்பியே தொகுத்தார் என்றது தவறான கூற்று என்பதும் நன்கு வெளியாகிறது. இவ்விரு குற்றங்களையும் சிறந்த சைவப் பற்றும் தமிழ்ப் புலமையும் திருவருள் துணையும் கொண்ட நம்பிமீது சுமத்தல் பொருத்தமற்றது. ஆதலின், நாம் முன்சொன்னபடி நம்பி தொகுத்தவை முதல் ஏழு திருமுறைகளே என்று கொள்வதே அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்தியது. பின்னவை நம்பிக்குப் பின்னர் நாளடைவில் திருமுறைகளாகப் பிற் காலத்தவராற் சேர்க்கப்பட்டன எனக் கோடல் நலம். இம் முறைவைப்பை முதன்முதல் கூறியவர் கி.பி. 14ஆம் நூற்றாண்டினரான உமாபதி சிவத்திற்கு முற்பட்டவரான திருமுறைகண்ட புராண ஆசிரியர் ஆவர். ஆகவே, அவர் காலமாகிய கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் இத் திருமுறை வைப்பு நடைபெற்றதாதல் வேண்டும். 8, 9, 10, 11ஆம் திருமுறைகள் எப்போது யாரால் முறைப்படுத்தப்பட்டன என்று கூறல் இயலாது இயலாது அவை நம்பிக்குப்பின் கி.பி. 11:12,13ஆம் நூற்றாண்டுகளில் நாளடைவில் திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற முடிபே இங்குப் பொருத்தமாகும்."