பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆராய்ச்சிக்கு உரிய மூலங்கள் கால ஆராய்ச்சி திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணத்தை ஆராயப் புகுமுன் அதன் ஆசிரியராகிய சேக்கிழார் வரலாற்றை ஆராய்வது நலம் பயப்பதாகும். அவரது காலம் - அவரது உண்மை வரலாறு ஆகிய இரண்டையும் நன்கு அறிதல், அவர் பாடிய நூலை அறிதற்குப் பெருந்துணை புரிவதாகும். சேக்கிழார் காலத்தை அறிந்த பிறகு, நாயன்மார் பட்டியலாகிய திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரரது காலத்தையும், அதனைச் சிறிது விரித்துத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி காலத்தையும் தக்க சான்றுகள் கொண்டு ஆராய்ந்து முடிபு கட்டுதல் நல்லது. இந்த மூன்று கால ஆராய்ச்சியாலும் நாம் 1 தொகைபாடிய காலத்தாற் பிற்பட்ட நாயனாராகிய சுந்தரர் காலத்தையும், 2 தொகையைச் சிறிது விரித்துப் பாடிய நம்பிகள் காலத்தையும் (3) இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு காவியம் பாடிய சேக்கிழார் காலத்தையும் அறிவதுடன், ஒன்றுக்கொன்று இடைப்பட்ட காலவெளியையும் அறிகின்றோம். பின்னர் நாம், நாயன்மார் அறுபத்துமூவரது பரந்து பட்ட காலத்தை அறிதல் வேண்டும். அறுபத்திருவரைப் பாடிய சுந்தரரது காலமே அப்பரந்துபட்ட காலத்தின் கீழ் எல்லையாகும். எனவே, நாம் மேல் எல்லையைக் கண்டறிதல் வேண்டும். சங்க காலம் என்பது இன்னது என்று திட்டமாக வரையறுக்கக் கூடவில்லை. ஆயினும், அதன் கீழ் எல்லை ஏறத்தாழக் கி.பி. 300 என்னலாம் என்பதை ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொண்டுள்ளனர். அந்தக் கால எல்லைக்கு உட்பட்ட இன்றுள்ள) சங்க நூல்களில் நாயன்மார் ஒருவர் பெயரேனும் சுட்டப்படாமையின். அறுபத்துமூவர் காலத்தின் மேல் எல்லை சங்க இறுதிக் காலமாகிய கி.பி. 300 எனக் கொள்ளுதல் பொருந்தும். இங்ங்ணம் நான்கு கால எல்லைகளையும் இலக்கிய வரலாற்று நூல்களின் துணையைக் கொண்டு ஆராயின், கீழ்வரும் முடிபுகளைப் பெறலாம். 1. நாயன்மார் அறுபத்துமூவர் காலம் கி.பி. 300 - 865 2. சுந்தரர் . " கி.பி. 840 - 865 3. நம்பிகள் - " கி.பி. 985 - 1014 4. சேக்கிழார் " இ.பி. 1133 - 1150