பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெரியபுராண ஆராய்ச்சி வரலாற்று ஆராய்ச்சி : நாயன்மார் காலம் அடுத்தபடியாக, மேற்கண்ட நான்கு கால நாட்டு நடப்புகளை நன்கறிய வேண்டும். (1) நாயன்மார் அறுபத்துமூவரும் துங்கபத்திரையாறு முதல் குமரிமுனை வரைப்பட்ட தென் இந்தியர் ஆவர். ஆதலின் அவர்கள் வரலாறுகளை அறிய, அவர்காலத் தென் இந்தியாவின் அரசியல் வரலாறு" - சமய வரலாறு - பொருளாதார வரலாறு' - சமூக வரலாறு என்பவற்றை அறிதல் இன்றியமையாததாகும். இந்த நான்கையும் அறிய அக்கால (கி.பி. 300 - 865த் தென் இந்திய வரலாற்றை அறிய வேண்டும். அவ்வரலாற்றை உணர்த்துவன யாவை? (a) அக்காலத்துச் செய்யப்பட்டு அழிந்தன போக இன்றுள்ள நூல்கள் (b) அக்கால அரசர் செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுக்கள், (c) அக்கால அரசர் கட்டிய கோவில்கள், வெளியிட்ட நாணயங்கள், (d) அக்காலத்தில் தென்னாடு வந்து சென்ற அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்கள் முதலியன. நாயன்மார் காலத்தில் கிருஷ்ணையாறு முதல் தெற்கே புதுக்கோட்டைவரை பல்லவர் அரசாண்டனர். அதற்குத் தெற்கே பாண்டியர் அரசாண்டனர். பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் இடையே மிகச் சிறிய நிலப்பகுதியைச் சோழர் ஆண்டனர்; மேற்கே சேரரும் அவர்க்கு வடக்கே, கங்கர் என்பவரும், அவர்க்கு வடக்கே கதம்பர் என்பவரும், அவர்க்கு வடக்கே சாளுக்கியர் என்பவரும் அரசாண்டனர். இப் பலதிறப்பட்ட அரசர்களைப் பற்றிய வரலாறுகளை (போர்கள் - சமயநிலை - பொருளாதார நிலை - சமூக நிலைகளை நாம் நன்கறிதல் வேண்டும். - கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கியர் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு வடக்கே விந்தமலைமுதல் தெற்கே கங்கநாடுவரையும், கிழக்கே கிருஷ்ணையாறுவரையும் ஆளத்தொடங்கினர்; அச்சாளுக்கியர்க்கும் தமிழகத்தையாண்ட பல்லவர்க்கும், சாளுக்கியர்க்கும் பாண்டியர்க்கும் போர்கள் நடைபெற்றன; சாளுக்கியர் படையெடுப்புகளால் பல்லவநாடு பெரிதும் பாதிக்கப்பட்டது. நாட்டில் பல காலங்களில் பல பஞ்சங்கள் தோன்றின. கி.பி. 8ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இராஷ்ரகூடர் என்பவர் சாளுக்கியரை வென்று சாளுக்கியப் பெருநாட்டை ஆளத் தொடங்கினர். அந்த இரட்டருக்கும் பல்லவர்க்கும் நட்பும் பகையும் மாறி மாறி இருந்தன. மணவுறவு ஏற்பட்டது. பல்லவர்க்கும் சேர சோழ பாண்டியர்க்கும் பல போர்கள் நடைபெற்றன. சமய நிலை நாயன்மார் வாழ்ந்த காலத்தில் கங்கநாடு சமணர் நிறைந்த நாடாக இருந்தது. பல்லவர்க்கும், கங்கர்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாகத் திகம்பர சமண முனிவர் தமிழ்நாடு முழுவதும் பரவிச் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்: