பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரியபுராண ஆராய்ச்சி 2. கோச்செங்கணான் 70 சிவன் கோவில்கள் கட்டினான் என்று திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்". சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ திருமால் கோவிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில் பலவாக ஒரே அரசனால் கட்டப்பெற்ற காலம் சைவ உணர்ச்சிவேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்ககாலத்தில் அத்தகைய உணர்ச்சிவேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்ககாலத் தமிழ் உலகில் L_jø) சமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக்கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஓர் அரசன் 70 கோவில்கள் கட்டல் அசம்பாவிதம். ஆயின் சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர், பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பெளத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்க காலப் பாண்டியன் அளித்த பிரம்மதேய வுரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக் கொடுமை இருந்தது என்பது வேள்விக்குடிப் பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற்றான் மதுரையில் மூர்த்தி நாயனார் துன்பப்பட்டார். சோழ நாட்டில் தண்டியடிகள், நமிநந்தி அடிகள் போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்களும் பூசல்களும் நடந்தன. இத்தகைய சமயக் கொடுமைகள் நடந்து, சைவசமய வுணர்ச்சி மிக்குத் தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான் போன்ற அரசர் பல கோவில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும். 5. கோச் செங்கணானைப் பற்றித் திருமங்கையாழ்வார் வெளியிடும் கருத்துகள் இவையாகும் " 1) உலகமாண்ட தென்னாடன்’ குடகொங்கன் சோழன் 2 தென் தமிழன் வடபுலக்கோன் 3. கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன் 4) விறல் மன்னர் திறம் அழிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச்சோழன் 5 படை மன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன் இக்குறிப்புகளால் இவன் (1) வலிபொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன் - வென்றவன் என்பதும் (2) கொங்கு நாடு வென்றவன் என்பதும் (3) சோணாட்டுக்கு வடக்கிருந்த நிலப் பகுதியை (தொண்டை நாட்டை? வென்றவன் என்பதும் 4 சிறந்த யானைப் படை, குதிரைப்படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன. { - - * m: * - - - - - கழல் மன்னர், விறல் மன்னர் படை மன்னர் என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க வலிவுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் 'தெய்வவாள்' கொண்டு வென்றான் என்பதாலும் பகையரசரது