பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் காலம் 65 வரும் செய்தி, 2 பொய்கையார் சோழன் மீது களவழி பாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் எனக்களவழி ஏடுகளின் ஈற்றில் எழுதப்பட்டுள்ள செய்தி இவ்விரண்டு கூற்றுக்களையும் ஆராய்வோம். 1. மேற்சொன்ன 74ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது 'உண்ணான் சொல்லித்துஞ்சிய பாட்டு என்பதால் அறியப்படும். புறநூலுற்றுப் பாடல்களின் கீழ் உள்ள பிற்காலத்தார் எழுதிய அடிக்குறிப்புகள் பல இடங்களில் பொருத்தமற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றுக்காக ஓர் இடம் குறித்துக் காட்டுவம், புறம் 389ஆம் செய்யுளில் 'ஆதனுங்கனைப் போல நீ கொடுப்பாயாக’ என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டதென்பதையும் கவனியாமல், இஃது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு என்று அடிக்குறிப்பு வரையப்பட்டுள்ளது. இங்ங்ணம் பிழைபட்ட இடங்கள் பல பொருத்தமற்ற அடிக்குறிப்புகள் பல. இத்தகைய அடிக்குறிப்புகளில் செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பும் ஒன்றாகலாம். களவழிப் பாக்களைக் காணக் கோச்செங்கணான் பேரரசன் என்பதும், வீரம் வாய்ந்த பகையரசரைக் கொன்றவன்' என்பதும் போரில் கொங்கரையும் வஞ்சிக்கோவையும் கொன்றவன்' என்பதும் தெரிகின்றன. இவற்றால், இச் சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ (சேர அரசன் போரில் கொல்லப்பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால் இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்படவில்லை. - (2) முன்சொன்ன 74ஆம் செய்யுள் தமிழ் நாவலர் சரிதையில், "சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையாருக்கு எழுதிவிடுத்த பாட்டு" என்ற தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும் இதுவும் வேறுபடக் காரணம் என்ன? . . . . . . . . . . - 13 புறநானூற்று.74ஆம் செய்யுள் அடிக்குறிப்பு. கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுளின் அடியில், "இது கேட்டுப் பொய்கையார் கள்வழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான்" என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவ்விருகூற்றுகளும் தம்முள் மாறுபடுதலைக்கண்ட பண்டித ந மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், "துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாக சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரன் ஆவன் என்று கொள்ள வேண்டும்" என்று கூறி அமைந்தனர். இங்ஙனம் பேரறிஞரையும் குழப்பத்திற்குட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது.