பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శిక్ష பெரியபுராண ஆராய்ச்சி கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் புத்ததத்தர் என்ற பெளத்த துறவியார் ஏறத்தாழக் கி.பி. 8ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்தவர் எனப்படுகிறார்." இவர் சோழ நாட்டினர். அவர் கவேரபட்டினம் (காவிரிப்பூம்பட்டினம், உரகடரம் உறையூர், பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலிய நகரங்களில் வாழ்ந்தவர். இவர் காவிரிப்பூம் பட்டினத்துப் பெளத்த விஹாரம் ஒன்றில் தங்கி, 'அபிதம்மாவதாரம் என்ற நூலை எழுதினவர். இவர் அந்நூலைத் தொடங்கிய பொழுதும் எழுதி முடித்தபொழுதும் உலகத்தை" அச்சுத விக்கந்தன் என்ற களப்ரகுல அரசன் ஆண்டு வந்தான் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். சேர, சோழ, பாண்டியரைச் சிறைப்பிடித்துத் தமிழகத்தை ஆண்ட் பேரரசன் என்று சில தமிழ்ச் செய்யுட்கள் அச்சுதக் களப்பாளன்' என்ற ஒருவனைப் புகழ்கின்றன”. இவன் புத்ததத்தர் குறித்த அச்சுதனாகலாம் என்று அறிஞர் கொள்கின்றனர்". (1) இவன் புத்ததத்தரால் குறிக்கப்பட்டுள்ளான் (2) இவன் பாண்டிய நாட்டையும் பிடித்து ஆண்டவன் என்று மேற்சொன்ன தமிழ்ப்பாக்கள் உணர்த்துகின்றன: 13. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு அளவரிய அதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனெனும் கலியரசன் கைக்கொண்டான்' என்று வேள்விக்குடிப் பட்டயம் பகர்கின்றது. இம்மூன்று குறிப்புகளையும் நோக்கப் புத்ததத்தர் குறித்த அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிர அரசன் ஏறத்தாழக் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் பாண்டியநாடு உட்பட்ட தமிழகத்தைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இங்ங்னம் வேற்றரசர்க்கு அடிமைப்பட்ட பாண்டிய நாடு (கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் இறுதியிற்றான்) கடுங்கோன் என்ற பாண்டியனால் கைப்பற்றப்பட்டது என்பதும் மேற்சொன்ன வேள்விக்குடிப் பட்டயக் கூற்றாகும். கடுங்கோன் முதலிய பிற்பட்ட பாண்டியர் பெயர்கள் சங்க நூல்களில் இடம் பெற்றில; புதிய வேந்தரான களப்பிரரைப் பற்றிய குறிப்பும் அந்நூல்களில் இல்லை. எனவே, கடைச் சங்கத்தின் இறுதிக்காலம் ஏறத்தாழக் கி.பி. நான்காம் நூற்றாண்டு முடிய (சுமார் கி.பி. 400 வரை) எனக் கொள்ளல் பொருத்தமாகும். இக்கால எல்லைக்குள் (1 சங்கச் செய்யுட்கள் இயற்றப் பெற்ற காலமும், 12 பின்னர் தொகுக்கப்பெற்ற காலமும் அடங்கும்." கோச்செங்கணான் சங்ககாலத்தவனா? இனி 63 நாயன்மாருள் ஒருவனும் அப்பர்க்கு முற்பட்டவனுமான கோச்செங்கணான் சங்க இறுதிக் காலத்தவன் என்று பலர் கூறியுள்ளனர். இதற்கு அவர் சான்றாகக் காட்டத்தக்கவை இரண்டு 1) 74ஆம் புறநானூற்றுப் பாட்டின் அடிக்குறிப்பில், "சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர்த்தா என்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு" என