பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் காலம் 63 சந்தித்தபோது அவர் வயது சுமார் 10 எனக் கொள்ளின் அவர் காலம் சுமார் கி.பி. 640 - 656 என்றாகும். இந்தக்காலம் பொருத்தமானதென்பது அவர் வரலாற்று நிகழ்ச்சிகளை முறைப்படுத்திக் காணின் நன்கு விளங்கும். அப்பர், சம்பந்தர் குறித்த நாயன்மார் அப்பர் தம் தேவாரப் பதிகங்களில் (1) அப்பூதி அடிகள், 12 சண்டீசர், (3) கோச்செங்கணான், (4) சாக்கிய நாயனார். (5) கண்ணப்பர், (6) கணம்புல்லர், 7 சம்பந்தர் (8 அமர்நீதியார், 19 நமிநந்தி அடிகள், (10) அரிவாள் தாயர் என்ற பதின்மரைப் பாராட்டியுள்ளார். சம்பந்தர் தம் பதிகங்களில் (1) சண்டீசர் (2 கண்ணப்பர், (3) நமிநந்தி அடிகள், (4) கோச்செங்கணான், 15 தண்டியடிகள், (6) புகழ்த் துணையார், (7) முருக நாயனார் (8 சிறுத்தொண்டர், 19 நீலநக்கர், 10 மங்கையர்க்கரசியார், (1) குலச்சிறையார் (12 திருநீலகண்ட யாழ்ப்பாணர், 13 நெடுமாறர் என்ற பதின்மூவரைப் பாராட்டியுள்ளார். அப்பர், சம்பந்தர் காலத்து நாயன்மார் அப்பர் சம்பந்தர் தேவாரம் கொண்டும் பெரிய புராணம் கொண்டும் காணின், அப்பர், சம்பந்தர் காலத்து நாயன்மார் இவராவர் : (1) அப்பர், (2) சம்பந்தர், (3) அப்பூதி அடிகள், (4) முருக நாயனார், (5) சிறுத்தொண்டர் (6) நீலநக்கர் 7 குலச்சிறையார் (8 மங்கையர்க்கரசியார், (9) நெடுமாறர் (10) குங்கிலியக் கலயர் (11) திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவரால் பாடப்பெற்ற - இவர்க்கு முற்பட்ட நாயன்மார் அப்பர், சம்பந்தராற் பாடப்பெற்றவரும் அவர்க்குக் காலத்தால் முற்பட்டவருமான நாயன்மார் இவராவர் : (1) கோச்செங்கணான், (2) சண்டீசர், (3) கண்ணப்பர், (4) சாக்கியர், (5) கணம்புல்லர், (6) அமர்நீதியார், (7) அரிவாள் தாயர் (8) நமிநந்தி, (9) தண்டியடிகள், 10 புகழ்த்துணையார். அப்பர், சம்பந்தர் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆதலின், இப்பதின்மரும் ஏறத்தாழக் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் ஆவர். இவருள் கோச்செங்கணான் கடைச்சங்க இறுதிக்காலத்தவன் என்று கூறப்படுகிறான். இவன் பெயரைப் புறப்பாட்டின் அடிக்குறிப்பு ஒன்று குறிக்கின்றது. ஏனைய நான்மார் அப்பெயரளவிலும் புறநானூறு போன்ற சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்றே கொள்ளத்தக்கவர் ஆவர். சங்கத்தின் இறுதிக்காலம் கண்டறியப்படின், இப்பதின்மர் காலத்தின் மேல் எல்லை ஏறத்தாழ இதுவெனஅறியலாம். ஆதலின், சங்கத்தின் இறுதிக்காலம் யாதெனக் காண்போம்.