பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெரியபுராண ஆராய்ச்சி சம்பந்தரும் அப்பரும் ஒரே காலத்தவர் என்பது முதலில் அவர் தேவாரப் பதிகங்களாலும் பின்னர்ச் சேக்கிழார் பெரிய புராணத்தாலும் அறியப்படும் உண்மையாகும். சம்பந்தர் தமது தேவாரத்தில் திருச்செங்காட்டங்குடியில் வாழ்ந்த சிறுத்தொண்டரை 11 பாக்களிற் புகழ்ந்துள்ளார். அவற்றுள். (1) சீர் (புகழ் உலாம் சிறுத்தொண்டன்' எனவும், (2) செருவடிதோள் சிறுத்தொண்டன்" எனவும் வரும் தொடர்களால், சிறுத்தொண்டர் போரிற் புகழ் பெற்றவர் என்பது குறிப்பாகப் பெறப்படுகின்றது. இதற்கு ஏற்பப் பெரிய புராணம். இவர் தம் மன்னன் சார்பாகத் தண்டுடன் சென்று பழைய நகரமான வாதாவியைத் தூளாக்கினார்’ என்று கூறுகிறது. இங்ங்னம் வாதாவியைத் தூளாக்கி அங்குத் தூண் நாட்டிய பல்லவன் மேற்சொன்ன மகேந்திரன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் என்று வேலூர்ப் பாளையப் பட்டயம் பகர்கின்றது. வாதாவி ஏறத்தாழ 13 ஆண்டுகள் சாளுக்கியர் ஆட்சியில் இல்லை என்பதையும், நரசிம்மவர்மன் வெற்றித் தூண் அங்கு இருப்பதையும் நோக்கச் சேக்கிழார் குறித்தபடி அத் தொன்னகரம் அழிக்கப்பட்டது என்பது நன்கு புலனாகிறது. இச்செய்தியை இவ்வளவு நுட்பமாகக் கூறும் சேக்கிழார், அவ்வாதாவிப் படையெடுப்பில் தலைமை வகித்த தானைத் தலைவர் பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர் என்று கூறுதலால், சிறுத்தொண்டர் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பது நன்கு விளங்குகிறது. மேலும் சிறுத்தொண்டர் காஞ்சியில் வாழ்ந்தவர் என்று தெலுங்கில் உள்ள பசவ புராணம் கூறுதலையும்" "சிறுத்தொண்டன் பணி செய்ய அமர்ந்தபிரான்" என்று சம்பந்தர் கூறுதலையும் நோக்க" சிறுத்தொண்டர் பல்லவர் தானைத்தலைவராக இருந்தபொழுது பல்லவர் கோநகரான காஞ்சியில் வாழ்ந்தார் என்பதும் ஒய்வுபெற்ற பிறகு செங்காட்டங்குடி அடைந்து சிவத் தொண்டில் ஈடுபட்டிருந்தார் என்பதும், அக்காலத்தேதான் சம்பந்தர் அவரைச் செங்காட்டங்குடியிற் சந்தித்தார் என்பதும் விளக்கமாகும். விளங்கவே சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்த காலம் ஏறத்தாழ வாதாவிப் போருக்கு (கி.பி. 642-க்குப் பிறகு என்னலாம். சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்ட மாறவர்மன் அரிகேசரி என்ற நெடுமாறன் காலம் கி.பி. 640 - 680 என்பர் ஆராய்ச்சியாளர்". நரசிம்மவர்மன் காலம் கிபி 630 - 668". எனவே, இவ்விரண்டு பேரரசர் காலங்களில் வாழ்ந்தவர் சம்பந்தர் என்பது உறுதிப்படுகின்றது. அவருள் அப்பர் முதியவராவர். அவர் சைவ நெறியிலிருந்து தக்க வயதில் சமணம் சென்றவர் சமணத்தில் பல ஆண்டுகள் இருந்து சிறப்புப்பெற்றவர். பிறகே சைவரானவர். ஆதலின், அவர் சைவராக மாறின பொழுது குறைந்தது 35 அல்லது 40 வயதினராதல் வேண்டும். அவர் 81 ஆண்டளவும் வாழ்ந்தவர் என்ற கர்ணபரம்பரைக் கூற்றை நம்பினால், அவரது காலம் உத்தேசமாகக் கிபி 580 - 660 எனக் கோடல் பொருத்தமாகும். சம்பந்தர் வயது கர்ண பரம்பரைக் கூற்றை நம்பி 16 எனக்கொண்டு அவர் சிறுத்தொண்டரைச்