பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலத்துச் சைவ சமய நிலைமை ァァ ஏகாம்பரநாதர் கோவிலில் மண்டபம் ஒன்று கட்டினான். இவனே தமிழகத்தில் முதன் முதல் கற்கோவில் கண்ட காவலன். இவனுக்கு முற்பட்ட கோவில்கள் யாவும் செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை. இச்செய்தியை இவனது மண்டபப்பட்டுக் கல்வெட்டே விளக்கமாக உரைக்கின்றது". மகேந்திர வர்மன் இங்ங்னம் கோவில்களை அமைப்பதில் வல்லவனாக இருந்தது போலவே இசையிலும் சிறந்த புலவனாக இருந்தான் என்பது இவனுடைய திருமெய்யம், குடுமியாமலை, மாமண்டுர்க் கல்வெட்டுக்களால் நன்குணரப்படுகின்றது". இவனது நடனக் கலை அறிவைச் சித்தன்ன வாசல் நடிகையர் ஒவியங்கள் நன்கு விளக்குகின்றன. அப்பர், சம்பந்தர் திருமுறைகள் உணர்த்துவன (கி.பி. 580-650) 4. மகேந்திரவர்மன் காலத்தும் இவன் மகனான நரசிம்மவர்மன் காலத்தும் வாழ்ந்த அப்பர். சம்பந்தர் திருமுறைகளை ஆராயின், அப்பர் பாடிய தலங்கள் ஏறக்குறைய 126 சம்பந்தர் பாடியவை ஏறத்தாழ 219" என்பது தெரிகிறது. இவையேயன்றி வைப்புத்தலங்களாக அப்பராற் குறிக்கப்பட்டவை ஏறக்குறைய 60-க்கு மேற்படுகின்றன." இவற்றை நோக்கி, அப்பர், சம்பந்தர் காலத்தில் இத்தமிழ் நாட்டில் ஏறக்குறைய 300 சிவன் கோவில்கள் இருந்தன என்று ஒருவாறு கூற இடமுண்டாகிறது. இக்கோவில்களுள் பலவற்றுள் இசை-நடனம் வழக்கிலிருந்தன என்பது அப்பர், சம்பந்தராற் குறிக்கப்பட்டுள்ளன". இவற்றுள் பல கோவில்கள் விழாக்கள் செவ்வனே நடைபெற்று வநத்ன என்பதும் அவர் பாடல்களால் அறியலாம்." அப்பர். சம்பந்தருக்கு முற்பட்ட அடியார் வரலாறுகள் அவ்வத் தலங்களிலும் பிற தலங்களிலும் ஒரோவழி வழக்கில் இருந்தன என்பதை அவர் பாடல்கள் உணர்த்துகின்றன. பாடல் பெற்ற தலங்களில் ஒன்று பல்லவன் ஈச்சரம்' என்ற பெயர்கொண்டும், மற்றொன்று 'மகேந்திரப் பள்ளி என்ற பெயர் கொண்டும் இருத்தலால் அவை பல்லவர் சார்புடைய கோவில்கள் என்பதும் அறியப்படுகிறது. அப்பர், சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலம் (கி.பி. 660 - 840) . * . . இக்காலத்தில் வாழ்ந்தவருள் முதல்வன் முதலாம் பரமேசுவரன் (கி.பி. 670-685). இவன் சிறந்த சிவபக்தன் உத்திராக்கத்தால் சிவலிங்க வடிவமாகச் செய்யப் பெற்ற முடியை அணிந்தவன் கூரத்தில் சிவன் கோவில் கட்டிப் பட்டயம் விடுத்தவன். இவன் கல்வெட்டுகள் யாவும் இவனது சிவப்பற்றை வெளிக்காட்டுவன. மகாபலிபுரத்தில் உள்ள கணேசர் கோவிலில் இவன் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் இவனுக்கும் சிவபிரானுக்கும் பொருள் பொருந்தும்படி சிலேடையாக அமைந்தவை படித்து இன்புறத் தக்கவை." . . . . . . . . . . . . . -