பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெரியபுராண ஆராய்ச்சி இராசசிம்மன் (கி.பி. 685-720) இவன் தந்தையைவிடச் சிறந்த சிவபக்தன். இவனே காஞ்சியிற் கயிலாசநாதர் கோவில் கட்டியவன்; பூசலார் நாயனார் காலத்தவனாகக் கருதப்படுபவன். ரிஷபலாஞ்சனன், பூரீ சங்கர பக்தன், பூரீ ஆகமப்பிரியன், சிவ சூடாமணி என்ற தொடர்களால் இவனது சைவப்பற்றை நன் குணரலாம். இவன் சைவசித்தாந்தத்தில் பேரறிவுபடைத்தவன் பெரிய இசைப்புலவன். இசைக் கருவிகளை மீட்டுவதில் இணையற்றவன் நடனக் கலையில் நல்ல புலவன். இவன் இக்கலியுகத்தில் வான் ஒலி கேட்டவன் என்பன இவனுடைய கயிலாசநாதர் கோவில் கல்வெட்டுக்களால் இனிது புலனாகின்றன". இவன் காஞ்சியில் கயிலாசநாதர் கோவில், ஐராவதேச்சுரர் கோவில், மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாகவுள்ள கோவில், மலைக்கோவில் இவற்றைக் கட்டியவன். இவன் காலத்து நடன வகைகள் யாவும் கயிலாசநாதர் கோவிலிற் கண்டுகளிக்கலாம். நாதாந்த நடனம் முதலிய பலவகை நிலைகளிற் சிவபிரான் நடிப்பதாகவும், கணங்கள் நடிப்பதாகவும், உமையம்மை பாடுவதாகவும் உள்ள சிற்பங்கள் இவனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தவை. சிவபிரானுடைய திருக்கூத்துச் சிறப்பை அப்பர் பாக்களில் காணலாம். ஆனால், அதனைக் கயிலாசநாதர் கோவில் சிற்பங்களிற் கண்களாரக் கண்டு களிக்கலாம். சுருங்கக்கூறின், கயிலாசநாதர் கோவிற் சிற்பங்கள் அப்பர் பாடல்கட்கு எடுத்துக் காட்டுகள் என்னல் தவறாகாது என்னலாம்" பரமேசுவரன் I (கி.பி. 720-725) இவன் இராச சிம்மன் மகன். இவன் திருவதிகைச் சிவனார் கோவிலைக் கற்றளியாக்கியவன் என்று அறிஞர் அறைவர்." - பல்லவமல்லன் (கி.பி. 725-790) இவன் சிறந்த வைணவன் ; திருமங்கையாழ்வார் காலத்தவன். ஆயினும், இவன் காலத்தில் சிவன் கோவில்கள் சிறப்புற்று விளங்கின. இவனது 28 ஆம் ஆட்சியாண்டில் காஞ்சியில் உள்ள முத்தீச்சுரர் கோவில் 'தர்ம மகாதேவீச்சுரம்’ என்ற பெயர்கொண்டு விளங்கியது. அக்கோவில் ஏகாலியரான திருக்குறிப்புத் தொண்ட நாயனார் பூசித்த கோவில் என்று கூறப்படுகிறது." அதற்கேற்ப அவரது உருவச்சிலை இன்றும் அக்கோவிலிற் காணலாம். மேலும் அக்கோவில் ஏகாலியர் மேற்பார்வையிற்றான் இருந்து வருகிறது: அக்கோவிலைக் கற்றளி யாக்கியவள் தர்ம மகாதேவி என்ற பல்லவ அரசியாக இருத்தல்கூடும். அக்காலத்தில் அக்கோவிலில் 44 தேவர் அடியார் இருந்து இசை நடனக் கலைகளை வளர்த்தனர்." இந் நந்திவர்மன் காலத்தில் தென்னார்க்காட்டுக் கோட்டத்து மணலூர்ப் பேட்டை மகாதேவர்க்குச் சித்தவடவனார் மகள் சிற்றுர் ஒன்றைத் தேவதானமாக விட்டாள்.' இவன் காலத்தில் சீயமங்கலத்தில் துணாண்டார் கோவில் மண்டபம் கட்டப்பட்டது."