பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலத்துச் சைவ சமய நிலைமை ア3 திருக்கோவலூர் வீரட்டானேசுவரருக்கு விளக்கெரிக்கப் பொன் அளிக்கப்பட்டது. நந்திவர்மன் 108 பிராமணர்க்குப் பிரமதேயமாகச் சிற்றுரை விட்டான். இச்செய்தியைக் குறிப்பதே உதயேந்திரப் பட்டயமாகும்" சிறந்த பல கலைகளில் வல்ல மறையவன் ஒருவனுக்கு ஏக தீரமங்கலம் என்ற சிற்றுரைத் தானமாக விட்டான். இச் செய்தியைக் கூறுவதே கசாக்குடிப் பட்டயமாகும்.’ இவ்வரசன் தண்டன் தோட்டத்தை அடுத்த சிற்றுரைத் தயாமுக மங்கலம் என்ற பெயரிட்டு 308 மறையவர்கட்குத் தானமளித்தான். அங்கு இருந்த சிவன், விஷ்ணு கோவில்களில் பூசை முதலியன நடக்க ஏற்பாடு செய்தான்." கோவிலில் மகாபாரதம் சொல்ல ஏற்பாடு செய்தான்." வாணபுரத்து வடசிகரக் கோவிலைப் புதுப்பிக்க நிலதானம் செய்யப்பட்டதாகத் திருவல்லம் கல்வெட்டுக் கூறுகிறது." பட்டத்தாள் மங்கலம் என்ற அக்கிரகாரமும் இவ்வாறே மறையவர்க்கு விடப்பட்டதாகும்”. தந்திவர்மன் (கி.பி. 790-840) இரண்டாம் நந்திவர்மன் மகனும் சிறந்த வைணவனுமான இத்தந்திவர்மன் ஆட்சிக்காலத்தில் நடந்த கோவில் அறச்செயல்கள் பல. அவற்றுள் பெரும்பாலன திருமால் கோவில்களில் நடந்தவை. இவன் கோயில் திருப்பணிகளிற் குறிக்கத்தக்கது , கச்சித் திருமேற்றளிக் கோவிற்கும் அதனில் இருந்த மடத்திற்கும் முத்தரையன் ஒருவன் பொருள் உதவி செய்ததேயாகும்" இதனால், தேவார காலத்திற்றானே மடங்கள் இருந்தன என்பதற்கு இஃதொரு சிறந்த சான்றாதல் காண்க. நந்திவர்மன் III (கி.பி. 840-865) சுந்தரர் காலத்தவனான இவனது ஆட்சியில் பல கோவில்கள் சிறப்புப் பெற்றன. இவன் குமாராங்குச சோழன் என்பவனது வேண்டுகோட் கிணங்கிப் பொன்னேரிக்கடுத்த தீங்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிற்கு ஓர் சிற்றுரைத் தானமாகவிட்டான்' இவன் பல கோவில்கட்கும் தானம் செய்தவன் என்பது முன்னரே இரண்டாம் பிரிவில் விளக்கப்பட்டு உள்ளது. இவன் காலத்தில் திருநாகேச்சரத்தின் ஒரு பகுதி குமார மார்த்தாண்டபுரம்’ எனப்பட்டது. அங்கு மிலாடுடையார் பள்ளி (மெய்ப்பொருள் நாயனார் கோவில் இருந்தது என்பது ஆதித்தன் கல்வெட்டால் அறியக்கிடைக்கிறது." இவன் காலத்துச் சிற்றரசராலும். இவன் மனைவி மாறம்பாவையாலும், பிறராலும் அறங்கள் செய்யப்பெற்ற கோவில்கள் - திரு நெய்த்தானம், செந்தலை, திருவல்லம், திருக்கடைமுடி, திருப்பராய்த்துறை, குடிமல்லம், நியமம் முதலியன” குன்றாண்டார் கோவிலில் திருஆதிரை நாளில் 150 பேருக்கு உணவளிக்க வழுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான். இந்நந்திவர்மன் காலத்திற்றான் கோவில்களில் திருப்பதிகம் ஒதப்பெற்றது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம் அல்லவா? -