பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெரியபுராண ஆராய்ச்சி சுந்தரர் தேவாரம் (கி.பி. 840-865) சுந்தரர் தேவாரத்தால் அறியப்படுவன : 1. திருத்துறையூர், திருப்பனையூர், திருநறையூர், திருப்பைஞ்ஞ்லி, வெஞ்சமாக்கூடல், பழையனுர், பனங்காட்டூர், திருப்பூவணம் முதலிய இடங்களில் இசை வளர்க்கப்பட்டது." - 2. திருத்துறையூர், திருப்பைஞ்ஞ்லி, வெஞ்சமாக்கூடல், நாகைக் காரோணம் முதலிய ஊர்க்கோவில்களில் நடனம் நடைபெற்றது" 3. பண்ணொடு பாடும் அடியார் பலர் இருந்தனர்" 4. கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன." 5. சைவ சமய நூல்களும் பல்கலை நூல்களும் இருந்தன" 6. கோவில்களில் "பூரீ பண்டாரம்" இருந்தது" என்பன, திருப்பதிகங்கள் சம்பந்தரும் சுந்தரரும் ஒவ்வொரு பதிகத்தின் ஈற்றிலும் இப்பதிகம் பாடுவோர் சிவன் அருள் பெறுவர் என்றும் கேட்போரும் பெரும் பேறு பெறுவர் என்றும் பாடி இருத்தலைக் காணின், அவ்வத் தலத்து அடியார் அத்தலத்துப் பதிகத்தை உறுதியாக எழுதிக் கொண்டிருப்பர். அதனைத் தம் ஊர்க் கோவிலிற் பாடியிருப்பர் என்று எண்ணுதல் பொருத்தமாகும். நமது எண்ணத்தை முற்சொன்ன திருவல்லம் கல்வெட்டும் உறுதிப்படுத்தல் காண்க மேலும், சம்பந்தர் திருவிடைவாய்' என்ற தலத்துக் கோவிலிற் பாடிய திருப்பதிகம் அக்கோவிலிற் கல்வெட்டாகக் காட்சி யளிப்பதை இன்றும் காணலாம். திருமுறைகண்டவன் என்று கூறப்பட்ட இராசராச சோழனுக்கு (கி.பி. 985க்கு முன்பே, திரு எறும்பியூர், திருப்பழுவூர், திருஆவடுதுறை, திருத்தலத்துறை, அல்லூர், குமாரவயலூர், அந்துவ நல்லூர் என்ற இடங்களில் உள்ள கோவில்களில் திருப்பதிகம் ஒதப் பெற்றதாகச் சோழர் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சுந்தரர் காலத்தவரான மானக்கஞ்சாறர் உருவம் திருமுட்டம் சிவன்கோவிற் கோபுரத்தில் உள்ளது. அதன்கீழ் இஃது இக்கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்து விடை பெற்ற தம்பிரான் தோழன் மானக்கஞ்சாறன் உருவம் என்பது பொறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நோக்க, தேவார ஆசிரியர் காலமாகிய பல்லவர் காலத்தில் சில கோவில்களிலேனும் திருப்பதிகங்கள் ஒதப்பெற்றன என்று முடிபு கோடல் தவறாகாது. - நாயன்மார் திருமேனிகள் சுந்தரர் காலத்திலேயே மிலாடுடையார் மெய்ப்பொருள் நாயனார் பள்ளி இருந்ததும், திருக்குறிப்புத் தொண்டர் பூசித்த முத்தீச்சுவரர் கோவில்