பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலத்துச் சைவ சமய நிலைமை 81 சிறப்புற்றதும் நோக்க, சுந்தரரே 63 நாயன்மாரையும் தனித்தனியே விதந்து கூறியிருத்தலையும் நோக்க, நாயன்மார் வரலாறுகள் தமிழ்நாட்டில் மக்கள் அறியத்தக்கவகையில் சிறப்புற்றிருந்தன என்பது தெளிவாகிறது" சந்தரர் தம் திருத்தொண்டத் தொகையைத் திரு ஆரூர்க் கோவிலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தின்முன் பாடினார் என்பது சேக்கிழார் கூற்று. இது சுவை பயக்கும் செய்தியாகும். சுந்தரர் தேவாசிரிய மண்டபத்தில் குழுமி இருந்த அடியாரைத் தனித்தனியே வணங்கிப் பாடினார் என்பது சேக்கிழார் கூற்று. சுந்தரர் காலத்தவராகச் சேக்கிழாராற் குறிக்கப் பெற்றவர் 13 பேர். இவரே உயிருடன் தேவாசிரிய மண்டபத்தில் இருந்திருக்கலாம். ஏனையோர் 50 பேரும் சுந்தரர்க்கு முற்பட்டவர் அல்லரோ? அவருள், அப்பர். சம்பந்தர்க்கு முற்பட்டவர் 17 பேர்; அப்பர், சம்பந்தர் காலத்தவர் 11 பேர் எஞ்சிய 28 பேரும் அப்பர். சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலத்தவர் என்பது நான்காம் பிரிவிற் கூறப்பட்டதன்றோ? இவர் அனைவரும் தேவாசிரிய மண்டபத்தில் உயிருடன் எங்ங்னம் கூடியிருத்தல் கூடும்? இங்ங்ணம் காலத்தால் முற்பட்ட அடியாரையும் தேவாசிரிய மண்டபத்திற் கண்டு சுந்தரர் தனித்தனி வணங்கி ‘அடியேன்” என்று பாடினார்' என்பது உண்மையாயின், அந்த நாயன்மார் 50 பேருடைய திருமேனிகள் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுவே நுட்பமாகக் கொள்ளத்தக்க முடிபாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் இவர்கள் சில ஊர்களிற்பாடும்பொழுது அவ்வூர்களில் முன்பு வாழ்ந்த அடியார் செயல்களைக் குறிப்பிட்டும் பாடியுள்ளனர்." அதை நோக்க, அவ்வத் தலங்களில் அந்நாயன்மார் திருமேனிகள் கோவில்களில் எழுந்தருளப் பெற்றிருக்கலாம் என்று நினைப்பது தவறாகாது. இம்முடிவுக்குத் திருமுட்டம் சிவன் கோவில் கோபுரத்தில் உள்ள மானக்கஞ்சாறர் உருவம் சான்றாதல் நோக்குக: மிலாடுடையார் பள்ளியும் நோக்குக, கற்சிலைகளோ, செப்புச் சிலைகளே அக்காலத்தில் இருந்தன என்பது நம்பத்தக்கது. . . . . - - . பிற்பட்ட பல்லவர் (கி.பி. 865-900) நிருபதுங்கவர்மன் - இவன் கழற்சிங்கன் மகன். இவனது 8ஆம் ஆட்சி ஆண்டில் வாகூர் வடமொழிக் கல்லூரிக்கு மூன்று சிற்றுர்களை மானியமாக விட்டான். அக்கல்லூரி குறைந்தது கி.பி. 8ஆம் நூற்றாண்டிலேனும் தொடங்கப் பெற்று நிருபதுங்கன் காலத்தில் வளர்ச்சி பெற்றதாதல் வேண்டும் நிருபதுங்கன் மனைவியாரான வீர மகாதேவியார் திருக்கோடிகாவில் உள்ள கோவிலில் இரண்ய கர்ப்பம், துலாபாரம் புகுந்து ஒரு பகுதிப் பொன்னை அக்கோவிற் பெருமானுக்களித்தார். இவனது காலத்தில் திருக்கோடிகர் திருத்தவத்துறை, திருநின்றவூர், திருஅதிகை, திருவாலங்காடு, திருக்கோவலூர், திருக்கடைமுடி