பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? பெரியபுராண ஆராய்ச்சி திருக்கண்டியூர், திருப்புலிவலம் முதலிய இடத்துக் கோவில்களில் நிபந்தங்கள் விடப்பட்டன." - . அபராசிதவர்மன் இவன் நிருபதுங்கன் மகன். இவன் காலத்திற் கட்டப்பட்டதே திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோவில்." இக்கோவில் இராசசிம்மன் கோவிலுக்கும் பிற்காலச் சோழர் கோவிலுக்கும் இடைப்பட்ட வளர்ச்சியுடையது' இவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர் சத்தியவேடு முதலிய இடத்துக் கோயில்கள் சிறப்புற்றன." அபராசிதன் மனைவியான மாதேவி அடிகள் திருவொற்றியூர்க் கோவிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு பொன் தந்தாள்.' தளிப் பரிவாரம் பல்லவர் காலத்தில் கோவில் வேலைகளில் ஈடுபட்ட அனைவரும் தளிப் பரிவாரம் என்னும் தொகுதிப் பெயராற் குறிப்பிடப்பட்டனர்." கோவிலின் சிறப்புக்கும், வருவாய்க்கும் தக்கவாறு பரிவாரம் சிறுத்தும் பெருத்தும் இருந்தது. 1. அப்பர் காலத்து மகேந்திர வர்மன் ஆதரவு பெற்றது சீராளாவில் (Czala) உள்ள கடோதீசுவரர் கோவில் அதனை அவ்வேந்தன் காலத்தில் பார்வையிட 12 பேர் இருந்தனர்.” எனின், அக் கோவில் தளிப் பரிவாரம் பெரியது என்பது புலப்படுகின்றதன்றோ? - 2. முதலாம் பரமேசுவரவர்மன் கட்டிய கூரம் கோவில் (1) இரண்டு வேதியர் பூசையைக் கவனித்தனர் (2) பாரதம் கூறப்பெற்ற மண்டபத்தைத் தூய்மை செய்து தினந்தோறும் அங்கு விளக்கேற்றிவைக்க ஒருவன் இருந்தான் (3) பாரதம் படித்து விளக்குபவன் ஒருவன் இருந்தான்" - 3. இரண்டாம் நந்திவர்மன் காலத்து முத்தீச்சுவரர் கோவிலில் ( மூன்று மறையவர் பூசையைக் கவனித்தனர். (2) இருவர் தட்டளி கொட்டினர். (3) 44 தேவரடியார் இருந்தனர். (4) இத் தேவர் அடியார்க்கு உணவளிக்கத் தவசிகள் இருந்தனர். (5) கோவிலை விளக்கும் தவசிகள் 12 பேர் இருந்தனர். (6) இவர் அனைவரையும் கவனித்துக் கோவில் ஆட்சி நடத்தத் தளி ஆழ்வார்’ இருந்தனர்." 4. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் திருவல்லம் கோவிலில் (1) பூசை செய்யச் சிவ மறையோர் இருந்தனர் (2) நீ பலி கொட்டுவார் இருந்தனர் (3) திருப்பள்ளி தாமம் பறிப்பார் இருந்தனர் (4) திருப்பதிகம் பாடுவார் இருந்தனர். வேறு பல பணிசெய்வார் இருந்தனர்." 5. மாறம்பாவையாரது நியமம் கல்வெட்டில் தளிப் பணி செய்யும் மாணிகள் என்பது காண்கிறது.’ இவர்கள் கோவிலைச் சார்ந்த மடத்தில் வாசித்துக்கொண்டு கோவிற் பணி செய்து வந்த மாணவராகலாம். பல்லவர்