பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலத்துச் சைவ சமய நிலைமை 83 ஆட்சியில் மடங்கள் இருந்தன என்பதற்குக் காஞ்சி திரு மேற்றளிக் கல்வெட்டும் காவேரிப் பாக்கம் கல்வெட்டும் சான்றாதல் காணலாம். காவேரிப்பாக்கம் கல்வெட்டில் மடத்துச் சத்தப் பெரு மக்களிடம்" விளக்குக்கு எண்ணெய் வாங்கப் பொன் தானம் செய்யப்பட்டது என்ற செய்தி காணப்படுகிறது. இதனால் மடத்து ஆட்சி நடத்திய எழுவர் கோவில் ஆட்சியிலும் பங்கு கொண்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு." கம்பவர்மன் ஆட்சிக் காலத்தில் திருவொற்றியூரில் ஒரு மடம் இருந்தது. அதன் தலைவர் பெயர் நிரஞ்சனகுரவர் என்பது." சிவன் கோவிலை மேற்பார்த்து வந்தவர் அமிர்தகணத்தார்" எனப்பட்டனர். தேவரடியார் அடிகள் மார்" என்றும் மாணிக்கத்தார் என்றும் பெயர் பெற்றனர். - கோவில் ஆட்சி கோவில்களை மேற்பார்வையிடும் பொறுப்பு முன் சொன்ன அமிர்த கணத்தார். கணப்பெருமக்கள் மடத்துச் சத்தப் பெருமக்கள் என்பவரிடம் இருந்தது மட்டும் அன்றி ஊர் அவையாரிடமும் இருந்தது" என்பது பல கல்வெட்டுக்களால் தெரிகிறது. திருவொற்றியூர்க் கோவில் ஆட்சி அமிர்தகணத்தாரிடமும் ஆதம்பாக்கத்துச் சபையாரிடமும் இருந்தது" உக்கலில் இருந்த பெருமாள் கோவில் ஆட்சி உக்கல் சபையாரிடம் இருந்தது." இங்ங்னமே குடிமல்லம், கூரம், திருமுக்கூடல், திருக்கோவலூர், திருவல்லம், தொண்டுர், திருநின்றவூர், திருக்கோடிகா, திருத்தவத்துறை, திருத்தணிகை முதலிய ஊர்க் கோவில்கள் ஊர் அவையார் மேற்பார்வையில் இருந்தன." இவ்வூர் அவையினர் ஆளுங் கணத்தார்’ எனவும், கணப்பெருமக்கள்' எனவும் பெயர் பெற்றனர். மக்கள் பெற்றிருந்த நாயன்மார் ப்ெயர்கள் பாடல் பெற்ற தலங்கள் பல பல்லவர் காலத்தில் கற்றளிகளாக இராமையால் பல்லவர் காலக் கல்வெட்டுக்கள் பெற்றில. மேலும், கல்வெட்டுப் பெற்ற கோவில்கள் பிற்காலச் சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட பொழுது அங்கிருந்த பல்லவர்காலக் கல்வெட்டுக்கள் சில அழிந்திருக்கலாம். கங்கைகொண்ட சோழிச்சரத்துக் கல்வெட்டுக்களே” இப்பொழுது சிதைந்து காண்கின்றன எனில், கிபி 7, 8, 9ஆம் நூற்றாண்டுப் பல்லவர் கல்வெட்டுக்கள் இயல்பாகவே அழிவுற்றிருந்ததில் வியப்பில்லை. புதுப்பித்தவர் அறிவின்மையால் அழிந்தன பலவாகலாம்." ஆதலின், பல்லவர் காலத்திற் சைவசமய நிலையும் நாயன்மார் பெற்றிருந்த சிறப்பும், கோவில்கள் உற்றிருந்த உயர்வும் உள்ளவாறு உணரக் கூடவில்லை. ஆதலின் இன்றுவரை வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைக் கொண்டே நாயன்மார் காலத்துச் சைவசமய நிலை ஒருவாறு கூறப்பட்டது. இங்ங்னமே பல்லவர் காலத்து மக்கள் வைத்து வழங்கிய நாயன்மார் பெயர்களைக் கல்வெட்டுக்களைக் கொண்டு கால முறைப்படி காண்போம்: .