பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை (கி.பி. 900 - 1133) முன்னுரை சென்ற பகுதியிற் பல்லவர் காலத்துச் சைவ சமய நிலையை ஒருவாறு இலக்கியம் கொண்டும் கல்வெட்டு, செப்புப் பட்டயம் கொண்டும் ஆராய்ந்தோம். இப்பகுதியில் சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்தன் காலமுதல் (கி.பி. 871 -907) சேக்கிழார் காலத்தரசனான இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133 - 1150 காலம் வரை (கி.பி. 871 - 1150) சோழர் ஆட்சியில் (சைவசமயம் எங்ங்ணம் வளர்ச்சி அடைந்தது என்பதைக் காண்போம். - - இக்கால எல்லைக்கு உட்பட்ட சோழ மன்னர்கள் விசயாலயன் (கி.பி. 850-871) | - - ஆதித்த சோழன் I (கி.பி. 871-907) | பராந்தகன் கிபி 907-95) இராசாதித்தன் கண்டராதித்தன் அரிஞ்சயன் (949-957) : (956-957) உத்தம சோழன் என்ற சுந்தர சோழன் என்ற மதுராந்தகன் பராந்தகன் II - (கி.பி 973-985) (கி.பி. 956-973) | | ஆதித்தன் II என்ற இராசராசன் 1 பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 985-1024 கிபி 956-969 இராசேந்திரன் 1. (கி.பி. 1012-1044)