பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை $91 ஆதித்தேச்சுரம், பண்டார வாடைக்கடுத்த தேவராயன் கோட்டைக் கோவில் கண்ணணுர் முருகன் கோவில், புதுக்கோட்டை சீமையில் உள்ள கார்குறிச்சிக் கற்றளி ஆகிய நான்கையும் கட்டினான். இவன் காவிரியாறு பிறக்கும் இடத்திலிருந்து கடல் வரை அதன் இரு கரையிலும் இருந்த கோவில்களைக் கட்டினான் (கற்றளியாக்கினான்? என்று அன்பில் பட்டயம் அறைகின்றது: இவன் இறந்த இடம் திருக்காளத்திக்கடுத்த தொண்டைமான் ஆற்றுர் என்பது அங்குக் கோதண்ட ராமேசுவரம் என்ற பெயர் கொண்ட கற்றளி இவன் நினைவுக்காக கட்டப்பட்டது. இவன் மகனான முதற் பராந்தகன் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்மயம் ஆக்கினவன் காட்டு மன்னார்குடிக் கடுத்த உடையார் கோவில், முசிரி தாலூகா சீனிவாச நல்லூர்க் குரங்கநாதர் கோவில், தில்லைத்கடுத்த எறும்பூர்க் கடம்பவனேசுவரர் கோவில் முதலியன இவன் காலத்தில் உண்டானவை. இவன் மகனான இராசாதித்தன் சுந்தரர் வளர்ந்த திருநாவலூரில் இராசாதித்தேசுவரம் என்ற கோவிலைக் கட்டினான்." சிறந்த சிவபக்தனான இராசராசன் பல ஆண்டுகள் உழைத்து எடுப்பித்த தஞ்சைப் பெரியகோவிலைப் பாராட்டாதார் யாவர்? அவன் அக்கோவிலுக்கு அளித்த பொன் அளவிறந்தது நிலங்கள் மிகப் பல தமிழகம் முழுவதிலும் இருந்து 400 பதியிலாரை அழைத்து அக்கோவிலில் அமர்த்தி நடனம்-இசை-நாடகக் கலைகளை வளர்த்தவன் ஒதுவார் 50 பேரை அமர்த்தித் திருப்பதிகம் ஒதச்செய்தவன். இவன் ஈழத்தில் இராசராசேசுவரம், தொண்டைமண்டலத்தில் அரிஞ்சயேச்சுரம், பழையாற்றில் அருள்மொழித் தேவேச்சுரம், திருவலசுழிக் கோவிலில் கூேடித்தரபாலர் கோவில், செம்பியன் மாதேவி என்ற சிற்றுரில் சிவன் கோவில், இவற்றைக் கட்டினான். இவன் மனைவியான உலக மகாதேவி என்பவள் திருவையாற்றுக் கோவிலின் வடபால் உலக மகா தேவீச்சரம் கட்டினாள் அதற்கு அவ்வம்மை விடுத்த நிபந்தங்கள் பல; பின்னர் அவற்றை இராசேந்திரன் தன் காலத்தில் திருத்தி அமைத்தான்." இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைப் புதிதாக அமைத்தான்; அதனைத் தலைநகரமாக்கினான்; அங்குப் பெரிய சிவன் கோவிலைக் கட்டுவித்தான். இவன் மகனான முதல் இராசாதிராசன் மன்னார்குடியில் ஜயங்கொண்ட சோழேசுவரம், இராஜ இராஜேசுவரம் என்ற கோவில்களையும், குடந்தை நாகேசுவரம் என்ற கோவிலையும் கட்டினான். முதற் குலோத்துங்கன் சூரியனார் கோவில், வேம்பற்றுர்க்கண்மையில் கர்க்கடேசுவரர் கோவில், குலோத்துங்க சோழேசுவரம் என்ற மேலப் பழுவூர்க் கோவில், கோட்டாற்று இராசேந்திர சோழேசுவரம், மன்னார்குடியில் உள்ள குலோத்துங்க சோழவிண்ணகரம் முதலியவற்றைக் கட்டினான்." அவன் மகனான விக்கிரம சோழன் மாயூரத்தை அடுத்த திருமங்கலத்தில் உள்ள சிவன் கோவில், குற்றாலத்தில் உள்ள விக்கிரம சோழேசுவரம் என்ற கோவில்,