பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 93 நடந்தன என்பதற்கு எண்ணிறந்த கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன." இவ்விழாக்கள் சோழரால் புதியனவாக உண்டாக்கப்பட்டன என்று அக் கல்வெட்டுக்கள் கூறாமையால், நீண்டகாலமாக வழக்கில் இருந்து சோழர் காலத்திற் பெருஞ் சிறப்படைந்தன என்று கோடலே தக்கதாகும். மடங்கள் இருந்த பதிகள் விசயாலயன் கால முதல் விக்கிரம சோழன் ஆட்சி முடியச் சோழப் பேரரசில் சிறப்புற்றிருந்த மடங்கள் பல ஆகும். அவற்றில் பல புதியனவாக உண்டானவை. சில சோழற்கு முன்பே இருந்தன என்பது கல்வெட்டுக்களைக் கொண்டு உய்த்துணரக் கிடக்கிறது. இம் மடங்களுள் 1 அரசிற்கரைப் புத்தூரில் இருந்த குருகூர் மடம், 2. திருப்புகலூர் நம்பி திரு முருகன் திருமடம், 3. திரு ஆவடு துறையில் இருந்த திருவீதி மடம், திரு நீல விடங்கன் மடம், பிரமான வாசகன் மடம், நாற்பத்தெண்ணுயிரவன் மடம், 4. திருக்கழுக்குன்றத்து நமிநந்தி யடிகள் மடம், 5. திருவதிகையில் இருந்த வாகீசன் மடம், திருநாவுக்கரசன் மடம் 6. திருமுது குன்றத்து மடம் 7. திருமங்கலத்துப் பரஞ்சோதி மடம் 8. திருமணஞ்சேரியில் இருந்த பர சமய கோளி மடம், 9. திரு எறும்பியூர் மடம், 10. திருவையாற்று மடம் முதலியன யாரால் உண்டாக்கப்பட்டவை என்று கூறக்கூடவில்லை." புதியனவாக உண்டான மடங்களுள் 1. திருவொற்றியூரில் இருந்த இராசேந்திர சோழன் மடம், குலோத்துங்க சோழன் மடம். 2. திருநனிபள்ளியில் இருந்த முதல் இராசராசன் மடம், 3. திருவூறல் மடம் 4. மதுராந்தகம் கோவிலில் இருந்த தில்லைவாழ் அந்தணர் மடம் 5. திருவாட் போக்கியில் இருந்த எழுநூற்றுவன் மடம், 6. திருக்கற்குடியில் இருந்த திருவாகீசர் மடம் 7. சாய்க்காட்டு மடம் 8. திருவல்லத்து மடம் 9. திரு ஆவடு துறையில் இருந்த பஞ்சநதிவாணன் மடம், சிவலோக நாயகன் மடம், சங்கரதேவன் அறச்சாலை, பெருந்திருவாட்டி அறச்சாலை 10. திருக்கோடிகாவில் இருந்த ஐஞ்னுற்றெண்மர் மடம், 11. திருக்செங்காட்டங்குடி சிறுத்தொண்ட நம்பி மடம் என்பன குறிக்கத்தக்தவை" * , - - - இம் மடங்கள் பலவற்றில் சிவயோகியார் மாகேசுவரர் தபசிகள், அடியார், வேதியர், ஆண்டார் முதலியவரை உண்பிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இவை பலகலைகளில் வல்ல சமயத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. இவை தல யாத்திரை செய்யும் அடியவர் தங்கும் இடங்களாகவும், சித்தத்தைச் சிவன்பால் நிறுத்தி வீடுபேற்றை விரும்பிய துறவிகள் தங்கும் அமைதி நிலவிய இடங்களாகவும், அடியார்க்குச் சமய அறவுரை போதிக்கும் சமயப் பள்ளிகளாகவும் இருந்து சைவசமயத் தொண்டாற்றி வந்தன. இம்மடங்கள் கோவிலைச் சார்ந்த இத்தகைய தொண்டுகளில் ஈடுபட்டிருந்தமையாற்றான் சைவ சமயப் பிரசாரம் பெளத்த விகாரத்தையும் சமணப் பள்ளியையும் விஞ்சிவிட்டன. மக்கள் உள்ளத்தைக் கொள்ளை