பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பெரியபுராண ஆராய்ச்சி 10. 11 12. 3。 14.

  • 15.

16. தஞ்சைப் பெரிய கோவிலில் நம்பி ஆரூரனார், நங்கை பரவையார் திருநாவுக்கரையர், திருஞான சம்பந்தடிகள் இவர்தம் திருமேனிகள் எடுப்பிக்கப்பெற்றன. பல ஆடையணிகள் வழங்கப்பெற்றன." 'தத்தா நமரே காண்’ என்ற மிலாடுடையார் படிமம் ஒன்று அதே கோவிலில் எழுந்தருளப்பெற்றது." அதே பெரியகோவிலில் பைரவர், சிறுத்தொண்ட நம்பி, வெண் காட்டு நங்கை, சீராளதேவர் இவர்தம் செப்புத் திருமேனிகள் எடுப்பிக்கப்பெற்றன. பல ஆடையணிகள் வழங்கப்பெற்றன." திருமழபாடிக் கோவிலில் பிள்ளையார் ஞானசம்பந்தடிகள், திருநாவுக்கரைய தேவர், நம்பி ஆருரனார் திரு மேனிகள் வைக்கப்பெற்றன." . முதல் இராசாதிராசன் காலத்தில் கி.பி.1046-இல் திருவொற்றியூர்க் கோவிலில் 63 நாயன்மார் திருமேனிகள் எழுந்தருளப் பெற்றன : தினப்பூசைக்காக 75 கலம் நெல் தரப்ட்டது." திருநல்லம் கோவிலில் சண்டேசர்க்குத் தனிக் கோவில் இருந்தது." திரு ஆரூர்ப்பூங்கோவிலில் ஆளுடைய நம்பி, பரவை நாச்சியார் திருமேனிகள் இருந்தன. அவற்றின் பூசைக்காகச் சிற்றுார் ஒன் தானமாக விடப்பட்டது." . திருக்கழுமலம் (சீகாழி கோவிலில் சம்பந்தர்க்குத் தனிக்கோவில் இருந்தது. அதற்குப் பூசைகள் குறைவற நடந்தன." மேற்சொன்ன ஆளுடைய பிள்ளையார் கோவிலுள் மங்கையர்க்கரசியார்க்குத் தனிச் சிறு கோவிலும் இருந்தது." திருவாமுர்க் கோவிலில் திருநாவுக்கரசர் திருமேனி எழுந்தருளப் பெற்றிருந்தது. அதற்குமுன் விளக்கெரிக்க நிலதானம் செய்யப்பட்டது." இவை கல்வெட்டுக்களால் அறியப்பெற்ற செய்திகள், கல்வெட்டுக்களில் குறிக்கச் சந்தர்ப்பம் நேராத நிலையில் பல கோவில்களில் நாயன்மார் திருமேனிகள் இருந்திருக்கலாம் அன்றோ? சம்பந்தர் கோவில் சீகாழியிலும், அப்பர் கோவில் திருவதிகையிலும், சுந்தரர் திருமேனி திருவாரூரிலும், சிறுத்தொண்ட நம்பிக்குச் செங்காட்டங்குடியில் விழாவும் இருந்தமை நோக்க அந்தந்த நாயன்மார் வாழ்ந்த அல்லது பிறந்த இடத்துக் கோவிலில் அவர் திருமேனி எழுந்தருளப் பெற்றிருந்தது என்பதை உறுதியாக நம்பலாம் அன்றோ? -