பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 97 திருப்பதிகம் ஒதப்பெற்ற கோவில்கள் கோவில்களில் திருப்பதிகம் ஒதும் வழக்கம் சுந்தரர் காலத்திலேயே இருந்தது என்பதைத் திருவல்லம், திருமுட்டம் கல்வெட்டுக்களால் நன்கறியலாம் என்பதைச் சென்ற பகுதியிற் கூறினோம் அல்லவா? அப்பழக்கம் பல்லவர் காலமுதலே வந்ததாகும் என்பதை இராசராசனுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களும் குறிக்கின்றன. - 1. 10. 1 12. 本3。 14. பெ திருஎறும்பியூர்க் கோவிலில் உடுக்கை, தாளங்களுடன் திருப்பதிகம் ஒதப்பட்டது" திருப்பழுவூர்க் கோவிலில் திருப்பதிகம் ஓதுவார்க்கு நிலம் விடப்பட்டது." - திரு ஆவடுதுறையில் திருப்பதிகம் ஒத மூவர் இருந்தனர்." திருத்தவத்துறையில் நாளும் மூன்றுவேளை ஓத இரண்டு பிராமணர் இருந்தனர்." ஆத்தூர்க் கோவிலில் நாளும் திருப்பதிகம் ஒதப்பட்டது." குமாரவயலூர்க் கோவிலில் திருப்பதிகம் ஒதப் பெண்கள் மூவர் பொருள் உதவினர்." அந்துவ நல்லூர்க் கோவிலில் திருப்பதிகம் ஒதப் பெற்றது." இராசராசன் காலத்தில் குகூடிoர்க் கோவிலில் திருப்பதிகம் ஒதப்பட்டது" வட ஆர்க்காட்டுப் பிரம்மதேசம் கோவிலில் திருப்பதிகம் ஒதினவர்க்கு நிலம் விடப்பட்டது" * . திருமுதுகுன்றம் கோவிலில் திருப்பதிகம் ஒதினவர்க்கு நிலதானம் செய்யப்பட்டது" . . - திருவிழிமிழலையில் நாளும் இருமுறை திருப்பதிகம் ஒதப்பட்டது" குமார வயலூர்க் கோவிலில் திருப்பதிகம் ஒதுவார்க்கு மானியம் விடப்பட்டது." - - - திருநல்லம் கோவிலில் திருப்பதிகம் ஓத இருவர் இருந்தனர்" தஞ்சைப் பெரிய கோவிலில் 48 ஓதுவார் நியமனம் பெற்றனர்" இறுதியிற் சொன்ன 48 பேரும் பல தளிகளிலிருந்து தஞ்சைப் ரியகோவிலில் ஒதுவாராக நியமனம் பெற்றவராவர். அவர்கள் திருவாஞ்சியம், திருவெண்ணாவல், திருவாரூர், திருவாமூர், திருமறைக்காடு,