பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பெரியபுராண ஆராய்ச்சி திருவையாறு, திருஇடைமருதூர், திருவெண்காடு, தில்லை, சீகாழி முதலிய பல ஊரினர் என்பது அவர்கள் பெயர்களால் விளக்கமாகின்றது. அவர்கள் அவ்வூர்க் கோவில்களில் ஒதுவாராக இருந்து சிறப்புற்றவராதலின், இராசராசன் அவர்களைத் தான் கட்டிய பெரிய கோவிலில் அமர்த்தினன். எனவே, இராசராசன் காலத்தில் மேற்சொன்ன பல கோவில்களிலும் ஒதுவார் இருந்தனர் என்பது தெளிவாகின்றதன்றோ? - பிற்பட்டவர் காலத்தில் தென்னேரி," உடையலூர், தென் திருக்காளத்தி (துக்கச்சி)" திருச்சோற்றுத்துறை, இறையாநறையூர் (எல்வானாசூர்," திருமறைக்காடு." கீழுர்" முதலிய ஊர்க்கோவில்களில் திருப்பதிகம் ஒதப்பெற்றது. திருவொற்றியூர்க் கோவிலில் திருப்பதிகம் ஓத 16 தேவரடியார் இருந்தனர்." விக்கிரம சோழன் காலத்தில் திரு ஆமாத்தூரில் குருடர் பதினாறுபேர் திருப்பதிகம் நாளும் மும் முறை பாடிக்கொண்டிருந்தனர்.” இராசேந்திரன் ஆட்சியில் தில்லையில் மாசித்திங்கள் விழாவில் திருத்தொண்டத்தொகை பாடப்பெற்றது.’ இவ்வரசன் காலத்தில் தேவார நாயகம் என்றோர் அரசியல் உத்தியோகஸ்தன் இருந்தான். அவன் தேவாரப்பள்ளிகளை அல்லது கோவில்களில் தேவார ஒதுவார்களைக் கவனிக்கும் அதிகாரியோ என்னவோ, தெரியவில்லை. நடனமாதரைப் பெற்றிருந்த கோவில்கள் தஞ்சைப் பெரியகோவிலில் ஆடல்-பாடல்களுக்காக இராசராசன் தமிழகத்துக் கோவில்களில் இருந்த பண்பட்ட நடிகமாதர் 400 பேரைத் தேர்ந்து எடுத்து அமர்த்தினான். ஒவ்வொருவர்க்கும் ஒரு வீடும் ஒருவேலி நிலமும் அளித்தான். அந்தந்த ஊர்க் கோவில்களிலிருந்து அந்த நடனமாதர் வந்தனர் என்பதைத் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டு விளக்கமாகக் கூறக்காணலாம்." இதனால் இராசராசன் காலத்தும், அவனுக்கு முன்பும் தமிழ் நாட்டுப் பெரும்பாலான கோவில்களில் நடனமாதர் இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கா நிற்கின்றது. இங்ங்னமே பல தளிகளில் வேலைபார்த்து வந்த கோவிற் பணியாளர் தஞ்சைப் பெரிய கோவிலில் அமர்த்தப்பட்டனர்." கல்லூரிகள் சோழர் ஆட்சியில் வடமொழிக் கல்வி உயர்தர முறையில் போதிக்கச் சில கல்லூரிகள் இருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை-எண்ணாயிரம் திருபுவனை, திருமுக்கூடல், திருஒற்றியூர், வேம்பற்றுர் இவ்விடங்களில் இருந்தவையாகும். இவை அல்லாமல் திருஆவடுதுறை மடம் ஒன்றில் மருத்துவ மாணவர் மருத்துவக் கல்வி பயின்றனர் என்பதைக் குறிக்கிறது. அதே மடத்தில் ரூபாவதாரம் முதலிய வடமொழிநூல்கள் கற்பிக்கப்பட்டன.