பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 101 கல்வெட்டுச் செய்தி காண்க. இஃது இரண்டாம் குலோத்துங்கனது நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இதனில், திருமுறைகள் புதியனவாக வைக்கப்பட்டன என்பதோ, மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது என்பதோ குறிக்கப்படாமை காண்க காணவே, இப்பழக்கம் இரண்டாம் குலோத்துங்கற்கு முற்பட்டது என்பது உறுதிப்படும். இக் கல்வெட்டினால் சீகாழி ஆளுடைய பிள்ளையார் கோவிலில் 'திருக்கைக் கோட்டி என்ற மண்டபம் இருந்தது : அதனில் திருமுறைகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டன அழிந்தன புதுக்கவும், நாடோறும் பாடவும், பூசிக்கவும் ஒருவர் இருந்தார் அவர் தமிழ் விரகர் எனப்பட்டார் . அவர் கோவிலாளரால் மானியம் பெற்று வாழ்ந்தார் என்பன அறியக்கிடக்கின்றன. * சேக்கிழார்க்குப் பிற்பட்ட சோழர் ஆட்சியிலும் திருக்காராயில், திருவிழிமிலை, திருவுசாத்தானம் போன்ற இடங்களில் இத்தகைய மண்டபங்கள் இருந்தன . சில புதியனவாகக் கட்டப்பட்டன : அவற்றில் திருமுறைகள் ஒதப்பெற்றன என்பது கல்வெட்டுக்கள் உணர்த்தும் செய்தியாகும், ஆகவே, இப்பழக்கம் திருமுறைகள் தொகுக்கப்பெற்ற இராசராசன் காலமுதலே உண்டாகி வளர்ந்து வந்திருத்தல் வேண்டும் என்று கோடல் பொருத்தமாகும். நாயன்மார் சிற்பங்கள் கடம்பூர் என்பது காட்டு மன்னார் குடிக்கு 5 கல் தொலைவில் உள்ளது. அது மேலைக் கடம்பூர், கீழக் கடம்பூர் என இன்று இரண்டாகப் பிரிந்துள்ளது. பழைய காலத்தில் இவ்விரண்டுபகுதிகளும் ஒன்றாகவே இருந்தன. அப்பர் மேலைக்கடம்பூர்க் கோவிலைக் கரக் கோவில் என்றும், கீழக் கடம்பூர் கோவிலை இளங் கோவில்’ என்றும் பதிகத்திற் குறித்துள்ளார். மேலைக் கடம்பூர் கோவிலின் கர்ப்ப இல்லின் மேற்குப் பக்கத்தில் திருமால் படிவமும், இரண்டு கைகளையுடைய வாயிற் காவலர் படிவங்களும் இருக்கின்றன. ஆதலின், இக் கற்கோவில் பல்லவமன்னர் காலத்தில் கட்டப்பெற்றதாகும் என்னலாம். " கர்ப்ப இல்லம் தேர் போன்ற அமைப்புடையது. அதன் முன்று சுவர்களிலும் இரண்டு வரிசைகளில் 63 நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டள்ளன. அவற்றுள் காரைக்கால் அம்மையார் தலைகீழே நடந்து செல்வது போன்ற காட்சி ஒன்று." இவ்வாழ்க்கைச் சிற்பங்கள் பல்லவர் காலத்தில் உண்டானவை என்று திட்டமாகக் கூற முடியாதாயினும், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதிக்குப் பிறகேனும் செதுக்கப் பட்டவை என்று கோடல் தவறாகாது. . கீழக் கடம்பூர்ச் சிற்பங்கள் இக்கோவில் இன்று அழிந்த நிலையில் இருக்கின்றது. இதன் சிதைவுகளே எஞ்சி இருக்கின்றன. கருவறை ஒன்றே இருக்கின்றது. பூசை இல்லை.