பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}{} பெரியபுராண ஆராய்ச்சி பேரம்பலத்தைச் செப்புத் தகடுகளால் அழகு செய்தான் ; (12) நடராசர் பிட்சாடன யாத்திரையில் வெளிச்செல்ல ரிஷப வாகனம் ஒன்றை அமைத்தான்: (3) இறைவன் ஊர்வலம் சென்று மீளலை அறிவிக்கப் பொன் ஊது குழலைச் செய்து அளித்தான் ; (14) கோவிலில் பத்து விளக்குகள் தன் பெயரால் எரிய ஏற்பாடு செய்தான் ; பொற்குடம் ஒன்று சம்பந்தர் படிமம் ஒன்று, அதற்குரிய அணிகள் பல இவற்றை அளித்தான் ; 15 கோவிலில் உள்ள சிறு கோவில்கள் அனைத்திலும் ஆண்டு தோறும் அபிடேகங்கள் செய்யப் பொன் அளித்தான் ; (16 அம்மன் கோவில் திருச்சுற்று, மண்டபம், உயரமான கல்மதில் இவற்றை அமைத்தான் கூத்தாடும் பெருமானுக்கு ஏற்ற முறையில் அம்மனை ஆடை அணிகளால் அலங்கரித்தான் ; (17) உமையாள் அனைவர்க்கும் தாய் என்பதை அறிவிக்கக் குழந்தைகட்குப் பாலும் எண்ணெயும் வழங்க அழியாத முறையில் பொருளும் நிலமும் வழங்கினான் ; (18) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்தான்." இப்பேரருளாளன் திருவதிகையிற் செய்த திருப்பணிகளும் குறிக்கத் தக்கவை: (1) திருவதிகைக் கோவிலில் மண்டபம் ஒன்றைக கட்டினான் : (2) மாளிகை ஒன்றை அமைத்தான் ; (3) நூற்றுக்கால் மண்டபம் ஒன்றைக் கட்டினான் , 4 அகன்ற திருச்சுற்றை அமைத்தான் (5) நடன மண்டபம் ஒன்று நிருமித்தான். (6) திருநாவுக்கரசர் மடத்திற்கு 48 ஆயிரம் குழி நிலம் தானம் செய்தான் 7 இற்ைவற்கும் இறைவிக்கும் ஆடை அணிகள் அளித்து மகிழ்ந்தான் (8) கோவில் மடைப்பள்ளியைக் கற்களால் கட்டினான் : (9) அம்மனது காமகோட்டத்தை அமைத்தான் (10) வளஞ்சிறந்த நந்தவனம் அமைத்தான் (11 பத்தாயிரம் பாக்கு மரங்கள் கொண்ட தோப்பைக் கோவிலுக்காக உண்டாக்கினான் : (12 கோவிற்கு 500 பசுக்களைத் தானம் செய்தான் . . - (13) இரண்டு திருக்குளங்கள் எடுப்பித்தான் : (14) கோவிலுக்கு இறையிலியாக நிலங்களை விட்டான் இறைவர்க்குப் பொன் பாத்திரங்கள் பல செய்தளித்தான். 15 பெருமானுக்கு ஆடரங்கை அமைத்தான் 16 திருநாவுக்கரசர்க்குத் தனிக்கோவில் கட்டினான் (17) யாக மண்டபம் ஒன்றை நிருமித்தான். இங்ங்னம் திருவதிகையைப் பல்லாற்றானும் சிறப்புச் செய்தான்." திருக்கைக் கோட்டி நரலோக வீரன் தில்லையில் சம்பந்தர் தேவாரம் ஓத மண்டபம் கட்டினமை மேலே கூறப்பட்டதன்றோ? இம்முறை பிற கோவில்களிலும் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. சீகாழியில் 'ஆளுடைய பிள்ளையார் - திரு மாளிகைத் தமிழ் விரகர் கண்டு இக் கோவில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளி யிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி அழிவுள்ளன எழுந்தருளுவிக்கவும், திருமுறைகள் எழுந்தருளுவித்தும் திருமுறைகள் பூசித்தும் இருக்கைக்கு இவ்வூர் இறையிலியாக விட்ட நிலம் .." என்ற