பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 10 of

"கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சேவடி”. "தேவா தேவர்க் கரியானே.". திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப்

பறந்தும் காண மாட்டா அம்மான்.', 'நினையப் பிறருக் கரிய நெருப்பை.', "உம்பரும் அறியா ஒரு வனே. ’, ’பங்கயத் தயனும்மால் அறியா நீதியே.'

  • கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய விமலனே.","வேண்டும் அயன்மாற் கரி யோய் நீ.', 'பூங்கமலத் தயனொடும்ால் அறியாத நெறியானே.', 'மூவராலும் அறியொனா முதலாய ஆனந்த மூர்த்தியான்.'", "திருமால் அறியாத் திருப் புயங்கன்.'", "மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச் சிவபெருமான்.', "பண்டாய நான் மறையும் பாலணுகா மாலயனும் கண்டாரும் இல்லை.', "வானவரும் அறியா மலர்ப்பாதம். ', 'விண்ணவரும் மறியாத விழுப்பொருள்,' என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. .

பிறகு உள்ள 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'யாதவனும், துவாரகாபுரிக்கு அரசனும், திருமகளா கிய உருக்கு மணிப் பிராட்டியின் கணவனும் ஆகிய கண்ணனுடைய தலையின்மேல் தன்னுடைய திருவடி களை வைத்தவனும், பூதகணங்களுக்குத் தலைவனாகிய கைலாசபதியினுடைய ஒப்பற்ற தொண்டுகளுக்கு முதலும் முடிவும் இல்லாத தன்மையை அடைந்தவனு

மாக விளங்குபவன் அந்த உபமன்னிய முனிவன்.' : . .

அபாடல் வருமாறு : - -

'யாத வன்துவரைக்கிறை யாகிய

மாத வன்முடி மேல்அடி வைத்தவன் பூத நாதன் பொருவரும் தொண்டினுக் காதி அக்தம் இயலாமை அடைந்தவன்.'