பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - பெரியபுராண விளக்கம்

யாதவன்.யது குலத்தில் திருவவதாரம் செய்தவனும். துவரைக்கு-துவாரகாபுரிக்கு. இறையாகிய-அரசனாக விளங்கிய, மா.திருமகளாகிய உருக்கு மணிப் பிராட்டியி னுடைய. தவன்-கணவனும் ஆகிய கண்ணபிரானுடைய. முடிமேல்-தலையின்மேல் அடி-தன்னுடைய திருவடி களை ஒருமை பன்மை மயக்கம். வைத்தவன்-வைத்த, ஞானாசிரியனும். பூத-பூதகணங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். நாதன்-தலைவனாகிய கைலாசபதி யின். பொரு அரும் = ஒப்புக் கூறுவதற்கு அருமையாக இருக்கும். தொண்டினுக்கு-தொண்டுகளுக்கு: ஒருமை பன்மை மயக்கம். ஆதி-முதலும். அந்தம்-முடிவும், இலாமை.-இல்லாத தன்மையை, இடைக்குறை. அடைந் தவன்-பெற்றவனும் ஆக விளங்குபவன் அந்த உபமன் னிய முனிவன்; தோன்றா எழுவாய்.

அடுத்து வரும் 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

தந்தையாரைப் போன்றவ்ராகிய கைலாசபதியார் வழங்கியருளிய திருவருளால் திருமால் பள்ளி கொண்ட ருளியுள்ள பாற்கடலில் உள்ள பாலைக் குடித்துத் தன்னு: டைய திருவுள்ளத்தில் திருப்தியை அடைந்து தெவிட்டிப் போய் வளர்ச்சியை அடைந்தவன் அந்த உபமன்னிய முனிவன். கைலாசபதியினுடைய பக்தர்களாகிய முனி வர்கள் பல ஆயிரம் பேர்களும் தூய வாழ்க்கையை நடத்தும் யோகிகளும் தன்னைச் சுற்றி இருந்த சமயத்தில்." х பாடல் வருமாறு :

"அத்தர் தந்த அருட்பாற் கடல்உண்டு

சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் . பத்த ராய முனிவர்பல் லாயிரர்

சுத்த யோகிகள் சூழ இருந்துழி, இந்தப் பாடல் குளகம். அத்தர் - தந்தையாரைப்

போன்ற கைலாசப்தியர்ர். தந்த வழங்கிய அருள் -