பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்

முகவு ைர

சேக்கிழார் பாடியருளிய பெரிய புராணத்துக்கு அவர் வைத்த பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது.

இது,

“இங்கிதன் நாமம் கூறின்

இவ்வுல கத்து முன்னாள் தங்கிருள் இரண்டில் மாக்கள்

சிந்தையுட் சார்ந்து கின்று பொங்கிய இருளை ஏனைப்

புறஇருள் போக்கு கின்ற செங்கதி ரவன்போல் நீக்கும் -

திருத்தொண்டர் புராணம் என்பாம்.'

என்று பெரிய புராணத்தில் வரும் பாடலால் உணரலாம். இந்தப் புராணத்தின் பெருமையால் பெரிய புராணம் என்ற பெயரே வழங்கலாயிற்று. பெரிய புராணம் என்பதற்கு இரண்டு வகையில் பொருள் கூறலாம். இதில் உள்ள ஒவ்வொரு நாயனாருடைய வரலாறும் புராணம்