பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெரிய புராண விளக்கம்

என்ற பெயரோடு அமைந்துள்ளது. அவ்வாறு பல புராணங்களைத் தன்னகத்தே உடைமையால் இது பெரிய புராணம் ஆயிற்று என்பது ஒன்று. மற்றொன்று பெரியவர்களாகிய நாயன்மார்களுடைய வரலாற்றைச் சொல்லும் புராணம் என்பது. நாயன்மார்கள் இறைவனை வழிபடுவதில் பேரின்பத்தை அடைந்து ஜீவன்முக்தர்களாக விளங்கினார்கள். அவர்கள் இறைவனை அன்போடு கும்பிடுவதையல்லாமல் வீடுபேற்றையும் விரும்புவது இல்லை, இது,

'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி

விடும் வேண்டா விறவின் விளங்கினார்,'

என்று பெரிய புராணத்தில் வரும் பாடலால் தெளிவாகும்,

புறநானூற்றில் வரும் 204- ஆம் செய்யுளில், கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன் றதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று' என்ற அடிகள் வருகின்றன. அது கூறுவதன்படி பார்த்தால் வேறு யாரும் வழங்க முடியாத வீடுபேற்றை வழங்குபவன் எல்லாரினும் மேலான பரம்பொருளாகிய சிவபெருமான், அந்தப் பெருமான் வழங்கும் வீட்டையும் வேண்டாம் என்று கூறுபவர்கள் அவனைக் காட்டிலும் பெரியவர்கள் என்ற கருத்துத் தெளிவாகும். ஆகவே, வீடும் வேண்டா விறலோடு விளங்கின நாயன்மார்கள் பெரியவர்கள் என்பது பெறப்படும். அத்தகைய பெரியவர்களின் வரலாறு களைச் சொல்வதால் இந்தப் புராணம் இறைவனைப் பற்றிய புராணங்களைவிடப் பெரியதாயிற்று; ஆதலால் இதற்குப் பெரிய புராணம் என்ற பெயரே வழங்கலாயிற்று.