பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 3

மற்றப் புராணங்களுக்கு மூலம் வடமொழியில் இருக்கும். அவற்றைப் புலவர்கள் முதல் நூல்களாகக் கொண்டு வழிநூல்களாகத் தமிழில் புராணங்களைப் பாடினார்கள்.ஆனால் பெரியபுராணமோ அத்தகையதன்று. இது தமிழிலேயே பாடப்பெற்றது. சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய திருத் தொண்டத் தொகையையும் நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடியொற்றிச் சேக்கிழார் மிக விரிவாகப் பெரிய புராணத்தைப் பாடினார். அவர் அமைச்சராக இரு ந் த காலத்தில் சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தார். அவ்வாறு தலங்களைத் தரிசிக்கச் சென்றபோது நாயன்மார்களைப் பற்றிய செய்திகளை அங்கங்கே அறிந்தவர்கள் வாயால் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவற்றைப் பயன்படுத்தி விரிவாக நாயன்மார்களுடைய வரலாறுகளை அவர் பாடினார். அந்தக் காலத்தில் நாயன்மார்கள் திரு அவதாரம் செய்தருளிய ஊர்களில் இருந்த பெரியவர்கள் அந்த நாயன்மார்களுடைய வாழ்க்கையைப்பற்றிக் கர்ண பரம் பரையாக வந்த செய்திகளால் அறிந்து கொண்டிருந்தார் கள். சேக்கிழார் அவர்களைச் சந்தித்து அந்தச் செய்தி களைத் தொகுத்து வைத்துக்கொண்டார். அவற்றைப் பயன்படுத்தியே நாய ன் மார் க ளி ன் வரலாற்றைப் பாடினார்.

வடமொழியில் அகஸ்திய பக்தவிலாஸ்ம், உபமன்யு பக்தவிலாஸம் என்ற இரண்டு நூல்கள் உண்டு. மற்றப் புராணங்களைப் போல இராமல் அவை இரண்டும் பெரிய .புராணத்தைத் தழுவியே இயற்றப்பட்டன.

பெரிய புராணப் பதிப்பிற்கு உபோற்காதமாக யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் பின் வருமாறு எழுதியுள்ளார்.