பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு I 11

ைஅத்தன் ஆண்டு. ’’, தாதாய் மூவே ழுலகுக்கும் தாயே. 'குருந்தம் மேவிய சீர் அப்பனே.’’, *அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றருளாயே.', 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே. , 'அத்தனே அண்ட ரண்டமாய் நின்ற ஆதியே.’’, ‘அப்பன் என்னை வந் தாண்டுகொண் டரு வளிய அற்புதம்.', 'அச்சன்.', 'அத்தன் மாமலர்ச் சேவடி. ", "அத்தன் பெருந்துறையான்.  'எனை யாண்ட அத்தன்.’’ என்று மாணிக்கவாசகரும் பாடி .யருளியவற்றைக் காண்க.

அடுத் து உள்ள 16-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"அந்தக் கயிலாய மலையில் ஒரு பிரகாசம் ஆயிரம் சூரியர்களால் பொங்கி எழும்பெரிய சோதியைப் போலத் தங்களுக்கு முன்னால் காட்சி அளிக்க அந்த மலையைச் சுற்றியிருந்தவர்களும், பரிசுத்தமான வாழ்க்கையை நடத்துகிறவர்களும் ஆகிய பெருமையைப் பெற்ற தவத்தைப் புரிந்த தவசிகள், 'இந்த மலையில் இது என்ன ஆச்சரியம்!’ என்று கேட்டவுடன். பாடல் வருமாறு : -

"அங்கண் ஒரொளி ஆயிர ஞாயிறு ,

பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்

துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்

"இங்கி தென்கொல் அதிசயம்! என்றலும்.'

இந்தப் பாடல் குளகம். அங்கண்-அந்தத் திருக்கயிலாய

மலையில். ஒரொளி-ஒப்பற்ற ஒரு பிரகாசம். ஆயிர ஞாயிறு-ஆயிரம் சூரியர்களால்: ஒருமை பன்மை மயக் கம். பொங்கு-பொங்கி எழும். பேரொளி-பெரிய சோதியை, போன்று-போல. முன்-தங்களுக்கு முன்னால், தோன்றிட-காட்சி அளிக்க.த்:சந்தி. துங்க-து.ாய்மை யான வாழ்க்கையை நடத்தும். மா-பெருமையைப் பெற்ற. தவர்-தவத்தைப் புரிந்த தவசிகள்: ஒருமை !