பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 + 2 -. பெரியபுராண விளக்கம்

பன்மை மயக்கம். சூழ்ந்திருந்தார்-உப.மன்னியமுனிவரைச் சுற்றி இருந்தவர்கள் : ஒருமை பன்மை மயக்கம். எலாம்யாவரும்; இடைக் குறை. இங்கு-இந்த மலையில். இது என்கொல்-இது என்ன. கெர்ல: அசைநிலை. அதிசயம்-ஆச்சரியம். என்றலும்-என்று கேட்டவுடன்,

பிறகு உள்ள 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு : *செவ்வந்தி வானத்தில் உதயமாகும் பிறைச்சந்திர னைத் தம்முடைய தலையில் அணிந்த தலைவராகிய கைலாசபதியினுடைய திருவடிகளைத் தியானித்து உணர்ச்சியை அடைந்து அந்த உபமன்னிய முனிவன், கெைசந்தமிழ் நாட்டில் தெற்குத் திசையில் விளங்கும் திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய அரசனும், புகழைப் பெற்றவனும், வன்றொண்டனும் ஆகிய சுந்தர மூர்த்தி அடியேனுடைய தந்தையாரைப் போன்றகைலாசபதியார் வழங்கிய திருவருளால் அடைகிறான்' என்று உபமன்னிய முனிவன் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, பாடல் வருமாறு : . . . .

கஅந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்

சிக்தி யாஉணர்க் தம்முனி, தென்திசை வந்த காவலர் கோன்புகழ் வன்றொண்டன் எந்தை யார்.அரு ளால் அணை வான் என..' இந்தப் பாடலும் குளகம். அந்தி வான்-செவ்வந்தி வானத்தில் உதயமாகும். மதி-பிறைச்சந்திரனை சூடிய-தன்னுடைய தலையின் மேல் அணிந்த அண்ணல்-தலைவனாகிய கைலாசபதியி னுடைய, தாள்-திருவடிகளை ஒருமை வன்மை மயக்கம். சி ந் தி யா - தி யானித் து . உணர்ந்து-உணர்ச்சியை அடைந்து. அம்முனி-அந்த உபமன்னிய முனிவன். தென் திசை-செந்தமிழ் நாட்டில் தெற்குத் திசையில். வந்ததிருவவதாரம் செய்தருளிய. நாவலர் கோன்-திருநாவ அரசை ஆட்சி புரியும் அரசனும். புகழ்-புகழைப் பெற்ற .