பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 113

வனும்; திணைமயக்கம். வன்றொண்டன்-வன்றொண் டனும் ஆகிய சுந்தரமூர்த்தி. எந்தையார்-அடியேனு டைய தந்தையாரைப் போன்ற கைலாசபதியார். அருளால்-வழங்கிய திருவருளால், அணைவான்-இந்தக் கைலாச மலையை அடைபவன் ஆனான். என-என்று உபமன்னிய முனிவன் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய: இடைக் குறை. ". . . -

அந்தி வான் மதி சூடிய அண்ணல்:அந்தி மதியோடும் அரவச் சடைதாழ.', 'அந்தி வெண்பிறையினோ டாறு சூடிய நந்தியை.', 'அந்திமதி சூடிய எம்மானை.","அந்தி வான்மதிசேர் சடைமுடி அண்ணல்.’’ என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும்,'அந்திப் பிறையணிந் தாடும் ஐயாறன்','அந்திலட்டத் திங்கட் கண்ணியன்.","அந்திப் பிறையும்” என்று திருநாவுக்கரசு நாயனாரும், அந்தி வெண்பிறை சூடும் எம்மானே' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், அந்தி மதிமுகிழான்." என்று கபிலதேவ நாயனாரும், அந்தி மதியொடணிந்து. என்று பட்டி .னத்துப் பிள்ளையாரும் பாடியருளியவற்றைக் காண்க. அடுத்து உள்ள 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தம்முடைய கைகளைக் குவித்துக் கும்பிட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கிப்பின்பு தரையிலிருந்து எழுந்து உபமன்னிய முனிவர் நின்றுகொண்டு அந்தத் திசையை நோக்கித் தம்முடைய திருமேனியில் ஆனந்த சாகரத்தைப் போலக் கண்ணிர்த் துளிகள் பொழிய, சிவந்த நீளமான சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் கொண்ட வரும் பெருமையைப் பெற்றவரும் ஆகிய அந்த முனிவர் போகும் சமயத்தில் தங்களுடைய சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளும்பொருட்டு, அங்கே இருந்த வேதி

யர்கள் கேட்பவர்களானார்கள். பாடல் வருமாறு:

கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை

மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் செய்ய நீள்சடை மாமுனி செல்வழி ஐயம் நீங்க வின்வுவோர் அந்தணர்.' பெ-8 -