பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - பெரிய புராண விளக்கம்

சுந்தர மூர்த்தி நாயனாருடைய பெருமையைப் பற்றி உபமன்னிய முனிவர் அவ்வாறு கூற வேதியர்கள் அவரை வணங்கிப் பின் வருமாறு சொல்லலானார்கள்; வேறு. எந்தப் பிரகாசத்தையும் வெற்றி கொண்ட பெரிய பிரகாச் மாகிய இது ய்ார் புரிந்த மேலான தவம்? அதை நன்றாகக் கேட்பதற்கு விழையும் விருப்பத்தை உடையோம் அடியேம்; இன்றைக்கு அதை எங்களுக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய்க என்று கூறியவுடன் பாடல் வருமாறு:

"என்று கூற இறைஞ்சி இயம்புவார்

வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்? கன்று கேட்க விரும்பும் கசையினோம்? இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.” இந்தப் பாடல் குளகம். என்று-என சுந்தரமூர்த்தி நாய் னாருடைய பெருமையைப் பற்றி.கூற-உப.மன்னிய முனிவர் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்ய இறைஞ்சிஇவதியர்கள் அந்த முனிவரை வணங்கி. இயம்புவார்-பின் வருமாறு சொல்லலானார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வென்ற-வேறு எந்தப் பிரகாசத்தையும் கீழ்ப்படுத்தி வெற்றி கொண்ட பேரொளி-பெருமையைப் பெற்ற பிர்காசமாகிய இது.யார் செய்-எவர் புரிந்த விழுத்தவம்மேலான தவம். நன்று-அதை நன்றாக. கேட்த-கேட்டுத் தெரிந்து கொள்ள. விரும்பும்-விழையும். நசையினோம்விருப்பத்தை உடையோம்அடியேம். இன்று-இன்றைக்கு. எமக்கு-அடியேங்களுக்கு உர்ைச்ெய்தருள்-திருவாய்மலர்ந்தருளிச் செய்க. என்றலும்-என்று அந்த வேதியர் கள் வேண்டிக் கொண்டவுடன்.

அடுத்துவரும் 21-ஆம் பாடலின் கருத்து வருமாறு: