பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 121:

கொண்ட உண்மையான பரம்பொருளாக உள்ளவனும் வள்ளலும் ஆகிய கைலாசபதி அணிந்து கொள்ளும் தேன் நிரம்பிய மலர்களைக் கட்டிய மாலையையும் பக்தர் களுக்கு அள்ளி வழங்கும் விபூதியையும் தன்னுடைய கைகளில் ஏந்திக்கொண்டு கைலாயத்தில் இருப்பவன் ஒருவன் இருக்கிறான். பாடல் வருமாறு:

'உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வாள் வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும் அள்ளும் கீறும் எடுத்தனை வ1 னுளன்.'

உள்ள வண்ணம்-உள்ளவாறு முனிவன்-உப.மன்னிய முனிவன். உரை செய்வான்-திருவாய் மலர்ந்தருளிச் செய்பவனாகி; முற்றெச்சம். வெள்ள-வெள்ளமாகிய நீர்கங்கையாற்றின் நீரை, ச்-சந்தி, சடை - தன்னுடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் தாங்கிக் கொண்ட. மெய்-உண்மையான. ப்-சந்தி. பொருள்-பரம்பொருள். ஆகிய-ஆக விளங்கிய வள்ளல்-வள்ளலாகிய கைலாசபதி, சாத்தும்-அணிந்து கொள்ளும்.மது-தேன் நிரம்பிய மலர்மலர்களைக் கட்டிய, ஒருமை பன்மை மயக்கம். மாலை யும்-மாலையையும். அள்ளும்-பக்தர்களுக்கு அள்ளி வழங். கும். நீறும்-விபூதியையும். எடுத்து- தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டு. அணைவான்-வ்ருகிறவனாகிய ஒருவன். உளன்-கைலாசத்தில்இருக்கிறான். - வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருள்: 'வெள்ளம். ஆர்ந்து மிளிர் செஞ்சடை.","வெள்ள நீர் விரிசடைத் தாங்' கிய விமலன்,”, “வெள்ளம் எல்லாம் விரிசடை மேலோர் விரி கொன்றை கொள்ள வல்லான் ", "வெள்ளமது சடை மேற் கரந்தான் ', 'வெள்ள நீரோடு செஞ்சடை வைத்த வியப்பதே.’, 'பள்ளமார் சடையிற் புடையே யடையப் புனல் வெள்ளம் ஆதரித்தான்.", வெள்ளம் தாங்கு சடை யினான்.","பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்த நீர் வெள்ளைேகாங்கினான்.”. சென்சடைம்மிசை வைத்ததும்: