பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பெரிய புராண விளக்கம்

பெரு நீரொலி வெள்ளம் தாங்கியது.” படர்சடை மேற் பயிலும் திரைக்கங்கை வெள்ள மதார விரும்பி நின்ற விகிர்தன்” என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்: 'வெள்ள்த்தைச் சடையில் வைத்த வேத்தேன்.”, “வெள்ள நீர்ச் சடையர் போலும்.', 'வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன்.', 'வெள்ளம் தாங்கு சடையனை.”, “வெள்ளம் உள்ள விரிசடை நந்தியை.”, வெள்ளமும் அரவும் விரவும் சடை வள்ளல்.”, 'வெள்ளநீர் கரந்தார் சடைமேல்.’, ‘’வெள்ளத்தைச் சடைவைத்த விகிர்தனார்.”, வெள்ளச் சடைமுடியர்.", "வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார்.”, வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்.”, 'கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளம்..” என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'வெள்ளம்தாழ் விரிசடை யாய்.” என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காணக. - -

வள்ளல் வள்ளல் ஆருர்ை.”, விடை யேறிய வேதியன் வள்ளல்.’, ஆமாத்துனர் அம்மான் எம் வள்ளல்.”, வள்ளல் இருந்த மலை.", விடையேறும் வள்ளல்" என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், இக்காயந்தன்னுள புண்டரீ கத்திருந்த வள்ளலை.", ஆரூர் அமர்ந்தஎம் வள்ளல் ”, 'திருப் பெயர் வள்ளல்.”, ஆறை வடதளி வள்ளலை.”, வள்ள லாகிய வான்மியூர் ஈசனே.”, மணஞ்சேரி எம் வள்ளலார்,”, வள்ளலே போற்றி மணாளா போற்றி.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், வள்ளல் எந்தமக்கே துணை” என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'பரியின்மேல் வந்த வள்ளல்.”, போற்றிஎன் போலும் பொய்யர் தம்மையாட் கொள்ளும் வள்ளல்.', 'வானோர்க் கமுதe வள்ளல்.”, மனிதரை யாட்கொண்ட வள்ளல்.” என்று மாணிக்க

வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 22-ஆம் பாடலின் கருத்து வருமாறு: