பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - பெரிய புராண விளக்கம்

மூர்த்தி நாயனாரும், ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே.”, “அருந்தவர்க்கருளும் ஆதி,', 'ஆதி போற்றி அறிவே போற்றி.', 'ஆதி 'திறம்பாடி.', 'ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு.”, “சொல்லுதற்கரிய் ஆதியே.”, 'நிரந்தரமாய் நின்ற ஆதி.', 'குருந்தம் மேவியசீர் ஆதியே.', 'அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே.”, 'ஆதி முதற்பரமாய பரஞ்சுடர்.’’, 'ஆதி எனக் கருளியவா றார்பெறுவார்.’’ என்று மாணிக்கவாசகரும் பாடியருளிய வற்றைக் காண்க. 2 :

. அடுத்து வரும் 23ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"அந்த நந்தன வனத்தில் முன்னால் அடியேங்களை ஆட்களாக உடைய தல்ைவியாகிய பார்வதி தேவியினுடைய இயற்கையாகவே நறுமணத்தைப் பெற்ற கூந்தலுக்கு அணி வதற்கு ஆகும் மலர்களைப் பறிக்கும்பொருட்டுச் சந்திர ன்ைப் போன்றவையும் ஒளி வீசுய்வையுமாகிய முகங்களைக் கொண்ட தோழிமார்களும், பொங்கி எழுகின்ற அழகைப் பெற்றவர்களும், 'நர்கணவாய்ப் புன்னைப் போன்றவர்களும் ஆகிய பெண்மணிகள் அடைந்தார்கள்."பாடல்பின்வருமாறு:

'அங்கு முன்னெமை ஆளுடை நாயகி

கொங்கு சேர்குழற் காம்மலர் கொய்திடத் திங்கள் வாண்முகச் சேடியர் எய்தினார் பொங்குகின்ற கவினுடைப் பூவைமார்.' அங்கு-அந்த நந்தனவனத்தில். முன்பமுன்னால். எமை. அடியேங்களை; இடைக்குறை. இவ்வாறு கூறியது உபமன் னிய முனிவர் தம்மையும் தம்மைச் சார்ந்த வேறு முனிவர் களையும் சேர்த்து. ஆளுடை-ஆட்களாகக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். நாயகி-தலைவியாகிய பார்வதி அம்மையினுடைய. கொங்கு-இயற்கையாகவே நறுமணம். சேர்-கமழும். குழற்கு-கூந்தலுக்கு. ஆம்-அணிவதற்கு ஆகும்.மலர் மலர்களை, ஒருமைபன்மை மயக்கம்.கொய்திடபறிக்கும் பொருட்டு, த் -சந்தி. திங்கள்-சந்திரனைப் போன்