பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு - 139.

திசையில் விளங்கும் செந்தமிழ் நாட்டில், இடவாகு பெயர். தங்கு-தங்கி வாழும் பொருட்டு. தோற்றத்தில்-அவன் எடுத்த பிறப்பில். இன்புற்று-சிற்றின்பத்தை நுகர்ந்து. ச்: சந்தி. சாரும்-மீண்டும் இந்தக் கைலாய மலையை அடைகிறான். என்று-என்று உபமன்னிய முனிவன் திருவாய் மலர்ந்தருளிச் செய்து. அவன்-அந்த ஆலாலசுந்தரன் ஆற்றிய செயல்-செயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றையும், அறைந்தனன் - உடமன்னிய முனிவன் விரிவாக எடுத்துத் திருவாய்மலர்ந்தருளிச் செய்' தான். - - ‘. . . . .

அங்கணாளன்: அங்கட் கருணை பெரிதா யவனே.’’. ‘'தேவூர் அங்கணன்.’’, அங்கணா அஞ்சவென்றருள் செய்.” அங்கணாளன் அடிதம் கையால் தொழ.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், அங்கனார் அடியார்க்கருள் நல்குவர். அங்கனன் எந்தை.", 'அங்கணான் அதுவாவவன் தன்மையே. , அங்கணனே அமரர்கள் தம் இறைவா. என்று திருநாவுக்கரசு நாயனா' ரும், அங்கனனே அருளாய்.', 'அங்கண் நம்பி.', 'திருவாவடு துறையுள் அங்கணாளனை. என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், அங்கண் அரசை. , அங்கணன் அந்தணனாய்., 'அங்கணனே உடையாய்.', 'குருத்தம் மேவிய சீர் அங்கணா.', அங்கணன் எங்கள் அமரர் பெம்மான்.' என்று மாணிக்கவாசகரும் பாடி அருளியவற். றைக் காண்க.

பிறகு உள்ள 30-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வேதியர்களும் அவ்விடத்தில் உபமன்னிய முனிவன் திருவாய் மலர்ந்தருளிச் செய்த ஆலாலசுந்தரனுடைய வரலாற்றைக் கேட்டவர்களுமாகிய அவர்கள் "ஆலால. சுந்தரன் பாச பந்தத்தைப் பெற்றதாகிய மனிதப் பிறவியில் பிறந்த செந்தமிழ் நாட்டின் தெற்குத் திை இந்தச் சிறப்பைக் கொண்ட திசைகளாகிய கிழக்கு, ம்ேற்