பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெரிய புராண விளக்கம்

அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே. , . அப்பன் என்னை வந்தாண்டு கொண் டருளிய அற்புதம்.', 'கழல்காட்டி அச்சன்., 'அத்தன் மாமலர்ச் சேவடி. , ஞான வாள் ஏந்தும் ஐயர்.' அத்தன் பெருந்துறையான்.' * அவி' நாசி அப்பா. , எனை ஆண்ட அத்தன்.' 'ஐயன் எனக்கருளியவாறு. ’’ என்று மாணிக்கவாசகரும் பாடி யருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 29-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அழகிய கண்களைப் பெற்றவனாகிய கைலாசபதி ஆலாலசுந்தரன் வேண்டிக்கொண்ட வேண்டுகோளுக்குத் தன்னுடைய திருவருளை வழங்கிய பிறகு அந்த நங்கைக ளாகிய இரண்டு பெண்மண்களோடு நம்பியாகிய ஆலால சுந்தரன் அந்தத் தெற்குத் திசையில் விளங்கும் செந்தமிழ், நாட்டில் தங்கி வாழ்வதற்காக எடுத்த பிறப்பில் சிற்றின் பத்தை நுகர்ந்து பிறகு இந்தக் கைலாய மலையை அடை கிறான்' என அந்தச் செந்தமிழ் நாட்டில் அந்த ஆலால சுந்தரன் ஆற்றிய செயல்கள் எல்லாவற்றையும் உப்மன்னிய முனிவன் திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். பாடல் வருமாறு: - ; : r

'அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்

நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென் றங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.” அம்- அழகிய. கணாளன்-கண்களைப் பெற்றவனாகிய கைலாசபதி, இடைக்குறை. கண், ஒருமை பன்மை மயக்கம், அதற்கு-ஆலால சுந்தரன் வேண்டிக் கொண்ட வேண்டுகோ ளுக்கு. அருள்-தன்னுடைய திருவருளை. செய்த-வழங்கிய. பின்-பிறகு. நங்கைமாருடன்-அந்த நங்கைமார்களாகிய இரண்டு பெண்களோடும். நம்பி-நம்பியாகிய ஆலால சுந்தரன். மற்று: அசை நிலை. அத்திசை-அந்தத் தெற்குத்