பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 14R,

அடுத்து உள்ள 31-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ஒப்புக் கூறுவதற்கு அருமையான தவத்தைப் புரிந்தவ னாகிய வியாக்கிரபாதனாகும் அருமையாகிய முனிவன் அடியேனுடைய தந்தையாகிய நடராஜப் பெருமானை அருச்சனை புரியும் பெருமையைப் பெற்றது. பல வகைப் பெருமைகள் சேர்ந்திருக்கும் பெரும் பற்றப்பூலியூர் என்று ஒரு வழியில் தங்களுடைய உள்ளங்களை வைத்திருப்பவ்ர்க். ளாகிய பக்தர்கள் வாழும் தலமாகும் நகரம் சிறந்தோங்கி விளங்கும். பாடல் வருமாறு: . . . .

"பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்

அருமு னிஎங்தை அர்ச்சித்தும் உள்ளது பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென் றொருமையாளர்வைப் பாம்பதி ஓங்குமால்

பொரு அரும்-ஒப்பாக வேறு யாரையும் கூறுவதற்கு அருமையாகிய தவத்தான் - தவத்தைப் புரிந்தவனாகிய. புவிக்காலன்-வியாக்கிரபாதன். ஆம்-ஆகும். அரு.அருமை யாகிய முனி-முனிவன். எந்தை-அடியேனுடைய தந்தை யைப் போன்றவனாகிய நடராஜப் பெருமானை. அடியேன் என்றவர் உபமன்னிய முனிவர். அர்ச்சித்தும்-அருச்சனை புரிந்ததுமாகிய பெருமையை உள்ளது-பெற்று விளங்குவது. பெருமை-பல வகையான பெருழைகளை ஒருமை பன்மை மயக்கம். சேர்-அடைந்து பொலியும். பெரும் பற்றப்புலியூர் என்று-பெரும்பற்றப்புலியூர் என ஒருமையாளர்-தங்த் ளுடைய உள்ளங்களை ஒரு வழியில் வைத்து உணரும் பக்தர்கள்: ஒருமை பன்மை மயக்கம். வைப்பு-வாழும். சிவத்தலம். ஆம்-ஆகத் திகழும். பதி-நகரம். இங்கும். சிறந்து ஓங்கி விளங்கும். ஆல்:ஈற்றசை நிலை. § 3 ; }

ஒருமையாளர்: ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்.', 'பந்தி ஒன்றி நினைவார்.’’, எண் - ஒன்றி நினைந்தவர்.', 'ஒன்றும் உள்ளம் உடையார்: