பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பெரிய புராண வி ளக்கம்

சித்தம் ஒன்ற வல்லார்க்கருளும் சிவன்', உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான்.', 'ஒன்றிய மனத்தடியர்' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், ஒன்றவே உணர்தி ராகில்.’’, ஒன்றி யிருந்து நினைமின்கள்.’’,

உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி...உணரப் படுவார்' என்று திருநாவுக்கரசு நாயன்ாரும் பாடியருளிய

வற்றைக் காண்க. - - . .

அடுத்து வரும் 32-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: அந்த அழகிய சிவத்தலமாகிய பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் நம்மைஆட்களாகக் கொண்டவளும், உண்மையான தவத்தைப் புரிந்தவளும், பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய சிவகாமவல்லி பார்த்து மகிழும் வண்ணம் விருப்பத்தோடு தந்தையைப் போன்ற நடராஜப் பெருமான் நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்கும் திருச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்து அருளுவான்; இந்தச் சிறப்பான இயல்பைப் பெறுவதாக உள்ளது வேறு எந்தத் திசை?’ பாடல் வருமாறு: - அத்தி ருப்பதி யில்கமை ஆளுடை மெய்த்த வக்கொடி காண விருப்புடன் அத்தன் நீடிய அமபலத் தாடும்மற் றித்தி றம்பெறலாம்திசை எத்திசை.” - அத்திருப்பதியில்-அந்த அழகிய சிவத்தலமாகிய பெரும் பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில், நமை-எம்மை; இடைக்குறை. ஆளுடை-ஆளாகப் பெற்ற. மெய்-உண்மை யான். த்:சந்தி. தவதைவத்தைப் புரிந்தவளும்; திணை மயக்கம். க்:சந்தி. கொடி-பூங்கொடியைப் போல விளங்கு பவளும் ஆகிய சிவகாமவல்லி உவம ஆகு பெயர். காணபார்த்து மகிழும் வண்ணம். விருப்புடன்-விருப்பத்தோடு, அத்தன்-தந்தையைப் போன்ற நடராஜப் பெருமான். நீடியநெடுங்காலமாகப் புகழ்பெற்று விளங்கும். அம்பலத்து