பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 143

-திருச்சிற்றம்பலத்தில். ஆடும்-திருநடனம் புரிந்தருளு வான். மற்று:அசைநிலை, இத்திறம்-இச்சிறப்பான இயல்பை. பெறலாம்.பெற்றதாக இருக்கும். திசை-வேறு திசை. எத்திசை-எந்தத் திசை. இது உபமன்னிய முனிவர் சூற்று.

பெண்மணிகளுக்குப் பூங்கொடி உவமை கொடி யிலங்கும் இடையாள்.', 'பூங்கொடி மடவாள் உமை,, என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், கொடி யிடையார் ஏழை. , என்று திருநாவுக்கரசு நாயனாரும்,’, கொடிகொள் பூ நுண் இடையாள்.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும். :கொடியேரிடையாள் சூறா.' என்று மாணிக்கவாசகரும், வஞ்சிக் கொடி நுடங்கும் நுண்ணிடையாள்.’’ என்று சேரமான் பெருமாள் நாயனா ரும் பாடி அருளியவற்றைக் காண்க. தவக்கொடி கான ஆடுபவர் : மங்கை காணநின் றாடுகின்றார்.’’ என வருவதைக் காண்க.

அடுத்து வரும் 33-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பூதங்கள் யாவற்றிற்குள்ளேயும் மலரும் மிலரைப் போல இருக்கு வேதம், யஜுர் வேதம் சாமவேதம் அதர்வண் வேதம் என்னும் நான்கு வேதங்களைப் படைத்த மூலமாகிய பரம்பொருள் வெளிப்படும் பூமியாகிய காதலைப் பெற்ற மங்கையினுடைய இருதயமாகிய தாமரை மலராகும் மாதா, கிய பார்வதி தேவிய்ைத் தம்முடைய் வாமப்ாகத்தில் கொண்டிருப்பவர்ாகிய வன்மீக நாதர் எழுந்தருளியிருக்கும் ஆலயம் விளங்கும் திருவாரூர் மலர்ச்சியைப் பெற்று விளங் கியது. பாடல் வருமாறு: :

பூதம் யாவையின் உள்ளவர் போதென வேத மூலம் வெளிப்படும் மேதினிக் காதல் மங்கை இதயகமலமாம் மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால் பூதம்-பிரபஞ்சத்தில் உள்ள பிருதுவி அப்பு தேயு வாயு, ஆகாசம் என்னும் பூதங்கள் ஒருமை பன்மை மயக்கம.