பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 5

எய்தாமையும் வேண்டாதது எய்தலும் ஆகிய குற்றம் பற்றுதலின் தன்வயமும், ஆற்றல்,குன்றுமாயின் எக்காலத் தும் எத்தேசத்தும் இளைப்பின்றித் தொழில் இயற்றுதல் ஏலாமையின் குறைவில் ஆற்றலும், அவ்வாற்றல் வரம்புட் பட்ட பரிமாணம் உடையதாயின் வரம்புட் படாத தொழில் இயற்றல் கூடாமையின் வரம்பில் ஆற்றலும் ஆகிய இவ்வறு குணங்களும் பதிக்கு இன்றியமையாமை காண்க. அப்பதியானவர் அநாதியே உள்ள முற்றறிவு முற் றுத் தொழில் ஆகிய சிவத்துவம் இயைதலால்தான் சிவத் துவம் என்னும் அதிசுத்தம் இயைதலால்தான் பt என்னும் தாது கிடத்தல் எனப் பொருள்படுதலின் இறுதிக் காலத்து உலகம் எல்லாம் தம்மிடத்து ஒடுங்கிக் கிடத்தலால்தான், சற்சனங்களுடைய மனங்கள் தம்பாற் கிடத்தலால்தான், பn என்னும் தாது மெலிவித்தல் எனவும் உருவித்தல் என வும் பொருள்படும். ஆதலால் ஆன்மாக்களின் பாசசத்தியை மெலிவித்துச் சிற்சத்தியைக் கூருவித்தலால்தான், காந்திப் பொருள் தரும் வலி என்னும் சொல் வர்ணவிபரியயம் உறுதலால்தான் சிவன் எனப்படுவர்.

அச்சிவனது ஆஞ்ஞையினாலேஅவ்வான்மாக்கள் கர்மானு சாரமாக நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதமும் உடைய ராய்ப் பிறந்து இறந்து உழலும் காலத்திலே முன்னர்ப் பெளத்தம் முதலிய் புறச்சமயங்களிலே நின்று அவ்வச்சமய நூல்களில் விதித்தபடி ஒழுகுவர்கள். அப் புறச் சமயி களுக்கு, அவரவராலே சொல்லப்ய்ட்ட் கர்த்திரு காரணங் களை அதிஷ்டித்துக் கொண்டு அந்தக் கர்த்திரு காரண சொரூபியாய் இருந்து சிவனே அருள் செய்வர். அது, அறிவினான் மிக்க அறுவகைச் சமயத் தவ்வவர்க்கங்கே ஆரருள் புரிந்து, வெறிய மாகடல் இலங்கையர் கோனைத் துவங்க மால்வரைக் கீழடர்த்திட்டுக் குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த