பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெரிய புராண 967 ಹ6 LL:

செறிவு கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொழில் திருப் புன்கூர் உளானே' என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும், 'அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம், குறியது வுடைந்தாய் வேதா கமங்களின் குறியி றந்தாங் கறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச், செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்." எனவும், 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாகனார் தாம் வருவர்மற் றத்தெய் வங்கள், வேதனைப் படும்இ றக் கும் பிறக்கும்மேல் வினையும் செய்யும், ஆதலால் இவை: யிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே' எனவும் வரும் சிவஞான சித் தித் திருவிருத்தங்களாலும் அறிக. புறச் சமயங்களிலே நின்று செய்த புண்ணியங்களினாலே பின் வைதிக மார்க்கத்திலே புகுந்து வேதத்திலும் அதன் வழிநூலாகிய மிருதி முதலியவற்றிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்துக்கும், பிரமசரியம் முதலிய நான்கு ஆச்சிரமத்துக்கும் விதித்த பசு புண்ணியங் களைச் செய்து சுவர்க்கத்திற் சென்று போகம் துய்த்து மீண்டும் பூமியிலே பிறப்பார்கள். அவர்கள் முன் செய்த வைதிக புண்ணிய மிகுதியினாலே சைவாகமத்தால், உணர்த்தப்படும் சைவத்திற் பிரவேசித்து, சரியை கிரியை யோசங்களை முறையே அநுட்டித்து அவற்றின் பலங் களாகிய சாலோக்கிய சாeப்பிய சாருப்பிய பதங்களைப் பெறுவார்கள். அவர்களுள் போகத்திலே வைராக்கியம் உற்றவர்கள் திரும்பப் பூமியில் வாராது சிவானுக்சிரசத் தினாலே பரமூத்திமான்கள் ஆவார்கள். போசத்திலே வைராக்கியம் உறாதவர்கள் திரும்பப் பூமியிலே பிறந்து சிவஞானத்தைப் பொருந்திப் பரமுத்தியாகிய சிவ சாயுச் சியத்தைப் பெறுவார்கள். இதற்குப் பிரமாணம் சில நெறிப் பிரகாசம்: ‘'இப்படி அவத்தை யோரைந் தெய்தியே பிறப் பிறப்பாம், வெப்புறும் காலந் தன்னில் வேதத்தின் வழிய தன்றிப், பொய்ப்பொருட் சமயந் தன்னிற்.