பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பெரிய புராண விளக்கம்

னுடைய ஆதரவால்-பேராவலால். இங்கு-இதற்குமேல். இயம்புகேன்-பாடத் தொடங்குவேன்.

பிறகு வரும் 38-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: இந்தத் திருத்தொண்டர் புராணத்திற்கு மூலமாக விளங்கும் திருப்பதிகம் வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனார் பாம்புப் புற்றில் இடம்கொண்டு எழுந்தருளியிருக் கும் பழையவராகிய வன்மீகநாதர் வழங்கிய திருவருளால் பாடியருளிய உண்மைகளைக் கூறும் திருத்தொண்டத் தொகை என்று சொல்லப் பெற்ற நல்ல திருப்பதிகம் வணங் . கப் பெற்றது ஆகும். ' பாடல் வருமாறு: z

"மற்றி தற்குப் பதிகம்.வன் றொண்டர்தாம்

புற்றிடத்தெம் புராணர் அருளினால் சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகைஎனப் பெற்ற கற்பதி கம்தொழப் பெற்றதாம்.' - மற்று : அசைநிலை. இதற்கு-இந்தத் திருத்தொண்டர் :புராணத்திற்கு. ப்: சந்தி. பதிகம்-மூலமாக னிளங்கும் திருப்பதிகம். வன்றொண்டர்தாம்-வன்றொண்டராகிய சுந்தரமூர்த்திநாயனார். புற்றிடத்து-பாம்புப் புற்றாகிய இடத்தில் எழுந்தருளியிருக்கும். எம்-அடியேங்களுடைய தலைவராகிய.இது சேக்கிழார் கூறியது.புராணர்-பழையவ ராகிய வன்மீக நாதர். அருளினால்-வழங்கிய திருவருளால். சொற்ற-பாடியருளிய மெய்-உண்மைகளைக் கூறும் ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. திருத்தொண்டத் தொகை என-திருத்தொண்டத் தொகை என்று இடைக் குறை. ப்: சந்தி பெற்ற-சொல்லப் பெற்ற நல்-நல்ல. பதிகம்-திருப்பதிகம். தொழப் பெற்றது-வணங்கப் பெற்றது. ஆம்-ஆகும். . . . . . .

- புராணர் ... ." :புராணன் அமரர் அதிபதி.", தபதி யாகிய புராண முனி.' என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், பொதியில் மேய புராணனை', மிகவும்

பழையான். பூதங்க ளாய புராணர். புத்தேளும்