பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு . #55

காண்பரிய புராணன்.", ஆதி புராணனாய் நின்றாய் போற்றி.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், படைப் போற் படைக்கும் பழையோன்.', 'யாரினும் முன்ன எம்பி ரான்.', 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, ’’, பாசவே ரறுக்கும் பழம்பொருள். என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. -

பிறகு உள்ள 39-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்த உண்மையான நாயன்மார்களின் வரலாறுகளைக் கூறும் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தில் கூறப்படும் சிவ பெருமானுடைய அடியவர்களாகிய நாயன் மார்களை தம்முடைய தலைவனாகும் நம்பியாண்டார் நம்பி தன்னுடைய புத்தியில் திருப்தி அடையும் வண்ணம் பாடி யருளிய வகை நூலாகிய திருத்தொண்டர் திரு அந்தாதியின் துணையால் நாயன்மார்கள் இந்தப் பூமண்டலத்தில் திருவவ தாரம் புரிந்தருளிய விதத்தைத் தவறு நேராமல் பாடத் தொடங்குவோம்.' பாடல் வருமாறு:.

"அந்த மெய்ப்பதிகத்தடியர்களை

கந்தம்நாதனாம் நம்பியாண் டார் நம்பி புக்தி ஆரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம். இது சேக்கிழார் கூற்று. அந்த மெய்-அந்த உண்மை யான ப்:சந்தி. பதிகத்து-நாயன்மார்களுடைய வரலாறு களைக் கூறும் திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதி சூத்தில் கூறப்படும். அடியார்களை-சிவபெருமானுடைய அடியவர்களாகிய நாயன்மார்களை. நந்தம்-நம்முடைய. தம்: அசை நிலை. நாதனாம்-தலைவனாக விளங்கும். நம்பியாண்டார் நம்பி - திருநாரையூரில் திருவவதாரம் செய்தருளிய நம்பியாண்டார். தம்பின்ன்னும் ஆதி சைவர். புத்தி-தம்முடைய திருவுள்ளம். ஆர்-திருப்தியை அடை யும் வண்ணம். ப்:சந்தி. புகன்ற-பாடியருளிய வகையி னால்-வகை நூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதியின்