பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பெரிய புராண விளக்கம்

துணையினால். வந்த-நாயன்மார்கள் இந்தப் பூமண்டலத் தில் திருவவதாரம் புரிந்தருளிய. ஆறு-விதத்தை வழாமல் -ஒரு தவறும் நேராமல் இயம்புவாம்-பாடத் தொடங்கு வோம்.

அடுத்து வரும் 40-ஆம் பாடல் திருமலைச் சிறப்பு என்னும் பகுதியின் இறுதிப் பாடல். அதன் கருத்து வருமாறு:

'இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையவும், சைவ சமயம் நிலைபெற்று ஓங்கி வளரவும் கணக்கு இல்லாத கீர்த்தியைப் பெற்ற நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார் பாடியதும், நல்வாழ்வு வாழ்ந்த தொண்டர்களுடைய கூட்டம் நிறைந்து தங்குவதும், பொருந்தியிருக்கும் குளிர்ச்சியைப் பெற்றதும் ஆகிய புனல் நாடாகிய சோழ நாட்டின் சிறப்பை இனிமேல் பாடத் தொடங்குவோம். பாடல் வருமாறு: -

உலகம் உய்யவும் சைவம்.கின் றோங்கவும் அலகில் சீர்கம்பி ஆரூரர் பாடிய - நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை குலவு தண்புனல் காட்டணி கூறுவாம்.' உலகம்-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். உய்யவும்-உஜ்ஜீவனத்தை அடையவும். சைவம்-சைவ சமயம். நின்று-நிலை பெற்று. ஒங்கவும்ஓங்கி வளரவும். அலகு - கணக்கு இல்-இல்லாத; கடைக் குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற நம்பி ஆரூரர்-நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார். பாடிய-பாடியருளி யதும்; வினையாலணையும் பெயர். நிலவு-செந்தமிழ் நாட்டில் வாழும். தொண்டர்தம்-திருத்தொண்டர்களி னுடைய தம்: அசைநிலை; ஒருமை பன்மை மயக்கம்.கூட்டம் -திருக்கட்டம். நிறைந்து-நிரம்பியிருந்து. உறை-தங்கு வதும் வினையாலனையும் பெயர். குலவு-மக்கள் மகிழ்ச் சியைப் பெற்று,வாழ்வதும். புனல் நாட்டு-புனல் நாடா கியதும் ஆகிய சோழவள நாட்டினுடைய அணி-சிறப்பை. ஆறுலாம்-இனிமேல் பாடத் தொடங்குவோம். இது

சேக்கிழார்க்ற்று.