பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.162 பெரிய புராண விளக்கம்

இனிக் காவிரி யாற்றின் இயல்புக்கு ஏற்ற பொருள் வருமாறு: சந்திரனை அளாவிய குடகுமலையின் சிகரத் தின் உச்சியிலிருந்து பொங்கி வருகின்ற வெண்மையான மேற் பக்கத்தைக் கொண்ட நுரை மோதிக்கொண்டு ஓடுவதால். அடியேங்களுடைய தலைவனாகிய சிவபெருமானுடைய தலையிலிருந்து பகீரதனுக்காக இறங்கி வந்து ஒடும் பொன் கொழிக்கும் காவிரியாறாகிய கன்னிகையின் வெள்ளம் கங்கையாற்றின் வெள்ளத்தைப் போல விளங்கும். பாடல் வருமாறு:

திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியில்

பொங்குவெண் தலைநுரை பொருது போதலால்

எங்கள் யகன்முடி மிசைகின் றேயிழி

கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.”

திங்கள்-பிறைச் சந்திரன், சந்திரனை. சூடிய

தன்னுடைய தலையில் தங்க வைத்திருக்கும்; அளாவிய குடகு மலையின். முடி-சிவபெருமானுடைய திருமுடியில்; ம்ேற்பக்கத்தில் உள்ள ச்: சந்தி, சிகரத்து-உள்ள மகுடத்தி னுடைய மலைமுடியினுடைய உச்சியில்-உச்சியிலிருந்து. பொங்கு பொங்கி வரும். வெண்-வெண்மை நிறத்தைக் கொண்ட தலை-மேற் பக்கத்தைக் கொண்ட நுரைநீரின்மேல் மிதக்கும் நுரை. பொருது-கரையை மோதிக் கொண்டு. போதலால்-ஒடுவதால். எங்கள்-அடியேங்க ளுடைய; இது சேக்கிழார் தம்மையும் மற்றச் சிவனடியார் களையும் சேர்த்துக் கூறியது. நாயகன்-தலைவனாகிய சிவபெருமானுடைய முடிமிசை நின்று-தலையின்மேலி ருந்து, ஏ:அசைநிலை, இழி-பகீரதனுக்காக இறங்கி ஒடும். கங்கையாம்-கங்கையாற்றைப் போல விளங்கும். பொன்னி யாம்-பொன்னைக் கொழிக்கும் காவிரியாறாகும். கன்னிகன்னிகையின். நீத்தம்-வெள்ளம். ஏ:ஈற்றசை நிலை.

நாயகன்: உயிர்கட்கு முன் தலையானவன்.'விளை பொருள்கள் தாகிைய தலைவன்.", மதிபுன்ைவனை